இந்தியா சீனா நெருக்கம் மேற்கத்திய நாடுகளுக்கு கெட்ட செய்தி... ட்ரம்ப்தான் காரணம்: ரகசியத்தை உடைத்த பாதுகாப்பு ஆலோசகர்
இந்திய பிரதமர் மோடியின் சீனப்பயணம், மேற்கத்திய நாடுகளுக்கு கெட்ட செய்தி என்றும், இப்படி ஒரு நிலை உருவாக ட்ரம்ப்தான் காரணம் என்றும் கூறியுள்ளார் அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்.
மேற்கத்திய நாடுகளுக்கு கெட்ட செய்தி
ட்ரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்ட்டன், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி சீனா சென்ற விடயம் மேற்கத்திய நாடுகளுக்கு கெட்ட செய்தி என்று கூறியுள்ளார்.
Trump’s former NSA John Bolton about Modi’s visit to Chinapic.twitter.com/Vi5EA83AIx
— Kapil Jain (@kapiljaink3) September 1, 2025
அதாவது, மேற்கத்திய நாடுகள், சோவியத் யூனியன் மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவதை குறைக்க, பல தசாப்தங்களாக முயற்சித்துவருவதாகவும், அதற்காகவே இந்தியாவை Quad போன்ற அமைப்புகளில் இணைய உற்சாகப்படுத்தியதாகவும் உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார் ஜான்.
ஆனால், இவ்வளவு கால முயற்சியை ட்ரம்ப் வீணாக்கிவிட்டார் என்கிறார் ஜான். இப்போது இந்தியா ரஷ்யாவை நோக்கி செல்கிறது, சீனாவுடன் நெருக்கம் காட்டுகிறது, அதற்கு ட்ரம்ப்தான் காரணம் என்கிறார்.
ட்ரம்ப் இந்தியா மீது ட்ரம்ப் வரிகள் விதித்தது மிகப்பெரிய தவறு என்று கூறியுள்ள அவர், ட்ரம்ப் இந்தியாவுடனான உறவுகளை கையாண்ட விதம் குறித்து முன்பே விமர்சித்துவந்துள்ளார்.
ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்கா 25 சதவிகித வரிகளை அபராதமாக விதித்ததைக் குறித்து கேள்வி எழுப்பிய ஜான், சீனா மீது ஏன் வரிகள் விதிக்கப்படவில்லை என்று கேட்டதுடன், வாஷிங்டனின் கொள்கைகள் குழப்பமானவை என்றும் விமர்சித்தார்.
இதற்கிடையில், அவர் அப்படி விமர்சித்த சில நாட்களில் FBI அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |