54 வயதில் அழகிய இளமை தோற்றம்..பேரக்குழந்தையை வரவேற்ற பின் பிறந்தநாளை கொண்டாடிய ராணி
ஜோர்டான் ராணி ரனியா அல்-அப்துல்லா தனது பேரக்குழந்தையை வரவேற்ற சில வாரங்களுக்கு பின் பிறந்தநாளை கொண்டாடினார்.
54வது பிறந்தநாள்
மத்திய கிழக்கு நாடான ஜோர்டானின் மன்னராக இருப்பவர் அப்துல்லா இரண்டாம் பின் அல் ஹுசைன். இவரது மகனான பட்டத்து இளவரசர் ஹுசைன், இம்மாத தொடக்கத்தில் பட்டத்து இளவரசர் ஹுசைன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முதல் குழந்தை பிறந்ததை அறிவித்தார்.
இதன்மூலம் 54 வயதில் இளமையான தோற்றத்தில் இருக்கும் ராணி ரனியா அல்-அப்துல்லா, தனது முதல் பேரக்குழந்தையை வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்குப் பிறகு ரனியா தனது 54வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
ஸ்டைலான ராணி
இன்ஸ்டாகிராமில் 10 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டுள்ள ராணி, ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழும் ஒரு ஸ்டைலான ராணியாக இப்போது அறியப்பட்டாலும், குவைத்தில் தாழ்மையான தொடக்கத்தைக் கொண்டிருந்தார்.
1970ஆம் ஆண்டில் பாலஸ்தீனிய பெற்றோருக்கு மகளாக இவர் பிறந்ததைத் தொடர்ந்து, அதே ஆண்டில் அவரின் குடும்பம் ஜோர்டானின் அம்மானுக்கு குடிபெயர்ந்தது.
பின்னர் இஸ்ரேலின் எல்லைக்கு அருகில் உள்ள மேற்குக் கரையின் துல்கர்மில் அவர்கள் குடியேறினர். குவைத்தில் பள்ளிப்படிப்பை முடித்த ரனியா, பின்னர் கெய்ரோவில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை படித்து, 1991யில் வணிகப் பட்டம் பெற்றார்.
முதல் சந்திப்பு
வங்கியில் பணியாற்றிய இவர் 1993யில் ஒரு விருந்தில் மன்னர் அப்துல்லா இரண்டாம் பின் அல் ஹுசைனை சந்தித்தார். அதன் பின்னர் ஐந்து மாதங்களுக்கு பின் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த தம்பதிக்கு ஹுசைன் (30), இமான் பிண்ட் (27), சல்மா பிண்ட் (23) மற்றும் ஹாஷிம் பின் அப்துல்லா (19) என நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் மூத்த பிள்ளையான ஹுசைன்தான் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |