ஏன் அனைத்து தலைவர்களையும் சந்திக்கிறேன்? கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் விளக்கம்
அனைத்து தலைவர்களையும் சந்திப்பது என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் என ஸ்ரீமதி தாய் விளக்கம்
ஸ்ரீமதி தாயார் மேல்முறையீட்டு மனுவை அரசு ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கை
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் மரணம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தனது மகளின் மரணத்திற்கு வேண்டும் என ஸ்ரீமதியின் தாயார் போராடி வருகிறார். அவர் தொடர்ச்சியாக நீதி கேட்டு முக்கிய கட்சி தலைவர்களை சந்தித்து மனு அளித்து வருகிறார்.
அந்த வகையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவர் மனு அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'எனது மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு கட்சி தலைவர்களை சந்தித்து மனு கொடுத்து வருகிறோம். இன்று காலையில் சட்டத்துறை அமைச்சரை சந்தித்து மேல்முறையீட்டை அரசே மேற்கொள்ளவேண்டும் என கேட்டுள்ளோம்.
எதிர்கட்சித்தலைவரிடமும், எனது மகளுக்கு நியாயம் கேட்டு மனு கொடுத்துள்ளோம். அவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அனைத்து தலைவர்களையும் சந்திப்பது என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே தான்.
இரு பிரேத பரிசோதனை அறிக்கைகளும் முரணாக உள்ளது.
சிபிசிஐடி மேல் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. நாங்கள் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அரசு ஏற்று நடத்த கேட்டுள்ளோம்' என தெரிவித்துள்ளார்.