விஜய்யுடன் அரசியலில் இணைவீர்களா? செய்தியாளர் கேள்விக்கு கமல் ஹாசன் அளித்த பதில்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நடிகர் விஜய்யின் அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
7ஆம் ஆண்டு தொடக்க விழா
நடிகர் கமல் ஹசனின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சி ஆரம்பித்து 6 ஆண்டுகள் முடிந்த நிலையில், 7ஆம் ஆண்டு தொடக்க விழா நடத்தப்பட்டது.
அப்போது கட்சித் தலைவர் கமல் ஹாசன் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அவர், 'முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை; முழு நேர அப்பனும் இல்லை, பிள்ளையும் இல்லை. நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல; சோகத்தில் அரசியலுக்கு வந்தவன். என்னை அரசியலுக்கு வரவைப்பது கடினம் என்றார்கள். என்னை வெளியேற்றுவது அதைவிடக் கடினம். எதிரிப் படையை நடத்துவதுபோல் விவசாயிகளை நடத்துகிறது மத்திய அரசு. கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நல்ல செய்தி விரைவில் வரும்' என்றார்.
விஜய்யுடன் அரசியலில்
அத்துடன் நடிகர் விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கமல் ஹாசன்,
''விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது அவரது பாணி; நான் செய்யும் விடயம் என் பாணி. அவருடன் முன்னரே பேசியிருக்கிறேன். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என முதன்முதலில் அழைத்த குரல் என்னுடையது'' என தெரிவித்தார்.
மேலும், தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. சாதி மதச் சழக்குகள் இருக்கும்வரை, வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை, ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது என குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) February 21, 2024
கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம்.
மக்களுக்கு அவர்களுடைய…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |