போக்குவரத்து விதியை 270 முறை மீறிய பெண் - லட்சக்கணக்கில் அபராதம் விதித்த பொலிஸார்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 270 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பெண் மீது பொலிஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
270 முறை விதியை மீறிய பெண்
கர்நாடக மாநிலம் பெங்களூவை சேர்ந்த பெண் ஒருவரே இதற்கு காரணம். இவர் சுமார் 270 முறை போக்குவரத்து விதியை மீறியுள்ளார்.
இவருக்கு தலைக்கவசம் அணியும் பழக்கம் இல்லை. சிவப்பு சமிக்ஞையின் போது வாகனத்தை நிறுத்தி வைப்பது இல்லை. இது போன்ற பல விடயங்களை செய்து 270 முறை விதிகளை மீறியுள்ளார்.
இது குறித்து அவரிடம் விசாரணை நடத்திய போது, தலைக்கவசம் போடும் பழக்கம் எங்கள் பரம்பரைக்கு இல்லை என கூறியுள்ளார். எரிபொருள் விற்கும் விலைக்கு 3 பேரை ஏற்று செல்வதில் என்ன தவறு? நான் அப்படி தான் செய்வேன் எனவும் கூறுகிறார்.
மேலும் நேரம் என்பது பொன் போன்றது. இதை சேமிப்பதற்காக சிவப்பு சமிக்ஞையில் நிற்காமல் நான் செல்வேன் எனவும் கூறியுள்ளார்.
இறுதியாக தலைக்கவசம் அணியாமல் வருகிறார் என பொலிஸார் ஒருவர் தடுத்து நிறுத்தி அபராாதம் விதித்துள்ளார்.
அந்த அபராதத்தில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று பற்றுச்சீட்டு வந்துள்ளது.
பின்னர் தான் இந்த பெண்ணின் செயல் குறித்து பொலிஸார் தெரிந்துக்கொண்டு, அவரது வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் எப்படி எல்லாம் வாகனம் ஓட்டக் கூடாது என்பதற்கு உதாரணமாக கர்நாடக மாநில வாகன ஓட்டிகளுக்கு எடுத்துக்காட்டாக இவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |