சின்னத்தை பறித்தும் பாஜக, அதிமுகவை பின்தள்ளியுள்ளது நாம் தமிழர் - நடிகை கஸ்தூரி வாழ்த்து
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு நடிகை கஸ்தூரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19 சதவீத வாக்குகள் பெற்று, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக தற்போது நாம் தமிழர் கட்சி உள்ளது. சில இடங்களை அதிமுகவை பின்னுக்கு தள்ளியும் உள்ளது.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி நாம் தமிழர் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தளத்தின் பதிவுகளில்,
''இனி மைக் சின்னம் நிரந்தரம். ECI தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைத்தாயிற்று. வாழ்த்துக்கள். நேர்மையான, ஆக்கப்பூர்வமான அனைவருக்குமான அரசியலை தமிழகத்தில் 8.9 சதவிகிதம் வரவேற்றுள்ளார்கள் என்பதை எண்ணும்போது எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கை வருகிறது. சின்னம் மாறாதிருந்தால் இன்னும் அதிகம் வாக்கு கிடைத்திருக்கும். தமிழக மக்களுக்கு பாராட்டுக்கள்'' என சீமானை குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், 'ஆளும் கட்சி தயவு இல்லை. யாருடனும் கூட்டணி இல்லை. சின்னத்தைப் பறித்துவிட்டார்கள். மத்திய மாநில அரசு அச்சுறுத்தல். NIA மூலம் முடக்க முயற்சி. வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை. டிவி பேப்பர் விளம்பரம் இல்லை. பல தொகுதிகளில் பிஜேபி அதிமுகவை பின் தள்ளியுள்ளது நாம் தமிழர்!' என தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி தயவு இல்லை.
— Kasturi (@KasthuriShankar) June 5, 2024
யாருடனும் கூட்டணி இல்லை.
சின்னத்தை பறித்துவிட்டார்கள்.
மத்திய மாநில அரசு அச்சுறுத்தல். NIA மூலம் முடக்க முயற்சி.
வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை. டிவி பேப்பர் விளம்பரமில்லை.
பல தொகுதிகளில் பிஜேபி அதிமுகவை பின் தள்ளியுள்ளது நாம்தமிழர் ! @NaamTamilarOrg
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |