வெளிநாடு செல்லும் கேட் மிடில்டன் கண்டிப்பாக இந்த உடையும் எடுத்துச் செல்வாராம்: கூறப்படும் காரணம்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் நீண்ட பல ஆண்டுகளுக்கு பிறகு தமது கணவருடன் வெளிநாடு பயணம் ஒன்றை மெற்கொள்ள இருக்கிறார். குறித்த பயணத்தில் அவர் கண்டிப்பாக எடுத்துச் செல்லும் ஒரு குறிப்பிட்ட உடை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
துக்க நாட்களில் அணியும் உடை
ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர், வேல்ஸ் இளவரசியாக புதிய பட்டம் பெற்றுள்ளார் கேட் மிடில்டன். இந்த நிலையில், நீண்ட பல ஆண்டுகளுக்கு பின்னர் வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதி அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளனர்.
@getty
ஆனால், வெளிநாடு செல்லும் ராஜகுடும்பத்து உறுப்பின்னர்கள் கண்டிப்பாக துக்க நாட்களில் அணியும் உடை ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயம் என்பதால், வில்லியம்- கேட் தம்பதியும் கருப்பு உடை ஒன்றை எடுத்துச் செல்ல உள்ளனர்.
அதாவது, ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களில் இருக்கையில், குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் இறக்க நேர்ந்தால், அந்த தகவல் அறிந்து நாடு திரும்பும் அவர்கள், கண்டிப்பாக கருப்பு உடையில் இருக்க வேண்டும் என பிரித்தானிய ராஜகுடும்பத்தில் எழுதப்படாத விதி உள்ளது.
ராணியார் எலிசபெத்தின் அரிதான விதி
குறித்த விதியானது, மறைந்த ராணியார் இரண்டாம் எலிசபெத் உருவாக்கியது என்றே கூறுகின்றனர். 1952ல் கென்யாவுக்கு விஜயம் செய்துள்ளார் ராணியார் இரண்டாம் எலிசபெத்.
@getty
அப்போது அவரது தந்தை ஆறாவது ஜோர்ஜ் மன்னர் காலமாகியுள்ளார். தகவல் அறிந்து உடனடியாக நாடு திரும்பிய ராணியார், தம்மிடம் அப்போது கருப்பு உடை இல்லாத காரணத்தால், விமானத்திலேயே காத்திருந்து, அரண்மனையில் இருந்து கருப்பு உடை எடுத்துவரப்பட்டு, அதை அணிந்துகொண்ட பின்னரே அவர் வெளியே வந்துள்ளார்.
அப்படியான ஒரு தாமதம் இனி வேண்டாம் என கருதியே, ராணியார் அந்த அரிதான விதியை ராஜகுடும்பத்து உறுப்பினர்களை பின்பற்ற வைத்துள்ளார். அதன் பின்னர், வெளிநாடு செல்லும் முக்கிய ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை ஒன்றையும் எடுத்துச் செல்கின்றனர்.
அதே வழக்கத்தை தற்போது பாஸ்டன் செல்லவிருக்கும் கேட் மிடில்டனும் பின்பற்ற இருக்கிறார் என்றே அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.