ஸ்டார்மரின் பிரதமர் பதவிக்கு ஆபத்து - பிரித்தானிய அரசியலில் பரபரப்பு
பிரித்தானியாவில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் பதவியை மாற்றும் முயற்சிகள் தீவிரமாகும் நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான திட்டங்கள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
துணை பிரதமர், அமெரிக்க தூதர் மற்றும் மூலோபாய திட்ட தலைவர் ஆகியோர் பதவி விலகியதையடுத்து, ஸ்டார்மர் தனது இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்க முயன்ற நிலையில், கட்சி உள்ளேயே எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து
தொழிலாளர் கட்சியின் சில உறுப்பினர்கள் ஸ்டார்மர் தனது நிலைப்பாட்டை மரராவிட்டால், அவரை நீக்குவது தவிர்க்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அவரை மாற்றுவதற்கான தகுதியான மாற்று வேட்பாளர்கள் இல்லாததால், அந்த முயற்சிகள் தற்காலிகமாக தடைபட்டுள்ளன.
Greater Manchester மேயர் Andy Burnham, சுகாதார செயலாளர் Wes Streeting மற்றும் முன்னாள் தலைவர் Ed Miliband உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
ஆனால், இவர்களில் யாரும் கட்சி முழுவதும் ஆதரவு பெற முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது.
ஸ்டார்மாரின் ஆதரவாளர்கள், மே மாதத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் அவர் தனது செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
வரவிருக்கும் லேபர் கட்சி மாநாட்டில், குழந்தை நலனுக்கான நிவாரணங்கள், வடக்கு இங்கிலாந்தில் ரயில் திட்டங்கள் போன்ற புதிய அறிவிப்புகள் மூலம் ஆதரவை மீட்டெடுக்க முயற்சி செய்யப்படலாம்.
மாற்று தலைவரின் பற்றாக்குறை ஸ்டார்மருக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்கினாலும், எதிர்காலத்தில் மேலும் பதவி இஅழைப்புகள் ஏற்பட்டால், அவரது நிலைமை ஆபத்தாக மாறும் வாய்ப்பு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Keir Starmer safe now, UK labour leadership crisis, UK Politics, Lack of leadership UK