கென்டக்கி பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை
கென்டக்கி மாநிலப் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கென்டக்கி பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு
கென்டக்கி பல்கலைக்கழகத்தின்(Kentucky State University) பிராங்க்ஃபோர்ட் (Frankfort) வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மாணவர் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றொரு மாணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து விரைந்து செயல்பட்ட சட்ட அமலாக்கத் துறையினர் சந்தேக நபரை அதிரடியாக கைது செய்தனர்.
முதற்கட்ட தகவல் படி, கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கென்டக்கி மாநிலப் பல்கலைக்கழகத்தின் மாணவர் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பல்கலைக்கழக வளாகத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மாணவர் விடுதியில் இந்த சம்பவம் நடந்ததை அடுத்து KSU வளாகம் முழுவதுமாக மூட உத்தரவு அமுல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தனிப்பட்ட நிகழ்வு என்றும், பெரிய கொலை தாக்குதல் போன்றது அல்ல என்றும் பொலிஸார் விளக்கியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |