கடவுளின் பேரால் நடந்த கொடூரம்..குழந்தைகளையும் விட்டு வைக்காத போலி பாதிரியார்: 201 உடல்கள் மீட்பு
கென்யாவில் கடவுளை காணலாம் எனக்கூறி விரதம், தற்கொலை செய்ய வைத்ததில் குழந்தைகள் உட்பட 201 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடவுளின் பேரால் நடந்த கொடூரம்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரத்தின் அருகே உள்ள ஷகாலோ என்ற வனப்பகுதியில், சிலரது உடல்கள் புதைந்து கிடைக்கின்றன என கடந்த மாதம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
@AP
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறிப்பிட்ட இடத்தை சுற்றி தோண்ட, தோண்ட பொலிஸார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். முதற்கட்டமாக தோண்டப்பட்டதில் 47 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியானது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், சர்வதேச கிருத்துவ ஆலயத்தின் பாதிரியாரான பால் தேங்கி மெக்கன்சி என்பரை சிலர் கும்பலாக பின்பற்றி, பின்னர் அவரது சீடர் ஆகியுள்ளனர்.
சொர்க்கத்துக்கு போக வேண்டுமா
பாதிரியாரின் அறிவுரைப்படி, சொர்க்கத்துக்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி அந்த சீடர்களிடம் கூறப்பட்டு உள்ளது. அவர்களும் அதனை நம்பி பட்டினி கிடந்து உள்ளனர்.
@Reuters
இதில் நிறைய பேர் பட்டினியால் உயிரிழக்கவே, ஆலயத்தின் குழு அவர்களை அங்கிருந்த காட்டில் புதைத்து வைத்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் அந்த கும்பலிலிருந்து 15 பேரை பொலிஸார் மீட்டுக் காப்பாற்றி உள்ளனர்.
இதில் நான்கு பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்த 800 ஏக்கர் வனப்பகுதியும் சீல் வைக்கப்பட்டு, பின்னர் தொடர்ந்து பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் பல அதிர்ச்சியூட்டும் விசயங்கள் தெரிய வந்துள்ளன.
குழந்தைகளே முதல் இலக்கு
தற்போது தடய அறிவியல் குழு இன்று 27 உடல்களை வெளியே எடுத்துள்ளனர். இதுவரை அவர்கள் 201 உடல்களை மீட்டுள்ளனர். அதில் குழந்தைகள் தான் அதிகம் என்பது நம்மை சோகத்தில் ஆழ்த்தும் தகவலாக உள்ளது.
@ap
பொதுவாக போலி சாமியார்களின் முதல் இலக்கே குழந்தைகளாக தான் இருந்துள்ளனர். குழந்தைகளை குடிசைக்குள் 5 நாட்கள் வரை உணவு அல்லது குடிநீரின்றி பூட்டி வைத்துள்ளனர்.
பின்னர் இறந்த குழந்தைகளின் உடலை போர்வையில் சுற்றிப் புதைத்துள்ளனர். இதில் கொடூரம் என்ன வென்றால் உயிரிழக்காத குழந்தைகளையும் அவர்கள் போர்வையில் சுற்றி புதைத்து வைத்தது தான்.
@reuters
மீட்கப்பட்ட உடலில் சில மின் வயர்களால் கட்டப்பட்டு இருந்திருக்கின்றன. மேலும் சில உடல் பாகங்கள் காணாமல் போகியுள்ளன. இதனால் உடல் உறுப்புகளை திருடும் கும்பல் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறதா என பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்.
இதனை தொடர்ந்து பாதிரியார் மெக்கன்சி மற்றும் அவரது மனைவி மற்றும் அந்த கும்பல்களை கைது செய்து, பொலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.