ஆடை இல்லாமல் பெண் ஊழியர்களுக்கு கட்டாய சோதனை: சிக்கிய மூவர்
கென்யாவில் சீஸ் நிறுவனம் ஒன்றில் பெண் ஊழியர்களை ஆடை இல்லாமல் சோதனை செய்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மூன்று மேலாளர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலாளர்கள் மூவர் விசாரணை
மத்திய கென்யாவின் Limuru பகுதியில் அமைந்துள்ள சீஸ் தொழிற்சாலையிலேயே தொடர்புடைய சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது. தவறான குப்பைத் தொட்டியில் பயன்படுத்திய சானிட்டரி நாப்கின் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பெண் மேலாளர்கள் மூவர் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
ஆனால் ஊழியர்கள் எவரும் உண்மையை ஒப்புக்கொள்ள மறுத்ததை அடுத்து, அந்த ஊழியர்களில் யாருக்கு மாதவிடாய் என்பதை அறிய, ஆடைகளை அவிழ்க்க கட்டாயப்படுத்தியுள்ளனர்.
Photograph: Handout
இந்த விவகாரம் கடந்த வாரம் இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மட்டுமின்றி, வியாழக்கிழமை அந்த நிறுவனத்திற்கு வெளியே, சானிட்டரி நாப்கின்களை வீசி சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
பொலிசாரால் கைது
இந்த நிலையில், அந்த நிறுவனமானது மூன்று மேலாளர்களையும் பணியிடைநீக்கம் செய்துள்ளதுடன், வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், நடந்த சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகவும், உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய சீஸ் நிறுவனமானது பெண்கள் மட்டும் பணியாற்றும் தொழிற்சாலையாகும். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நிறுவனத்தின் நடைமுறைகளை பிரதிபலிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தொடர்புடைய சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பெண் மேலாளர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கென்யாவில் கடந்த 2019ல் மாதவிடாய் கறை தொடர்பில் ஆசிரியர் ஒருவர் அவமானப்படுத்தியதை அடுத்து 14 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |