கலங்கடிக்கும் காட்சிகள்... இனி முடியாது: பட்டினி வழிபாட்டு விவகாரத்தில் அதிகாரிகள் முடிவு
கென்யாவில் மத போதகர் ஒருவது பேச்சை நம்பி பட்டினியால் உயிரை விட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சடலங்களை மீட்கும் நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறார்கள் உட்பட 90 சடலங்கள்
கென்யாவில் மத போதகர் ஒருவரின் பேச்சுக்கு அடிமையான கிராம மக்கள் பட்டினியால் உயிரை விட்டுள்ளனர். இதுவரை பல எண்ணிக்கையிலான சிறார்கள் உட்பட 90 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து,
@reuters
பிணவறைகள் நிரம்பியிருப்பதால், உடல்களைத் தேடும் பணியை விசாரணையாளர்கள் இடைநிறுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஷகாஹோலா வனப்பகுதியில் இருந்து தோண்டத் தோண்ட சடலங்கள் மீட்கப்படுவதாகவும், அந்த காட்சிகள் கலங்கடிக்கும் வகையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மட்டும் 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, மேலும் பல எண்ணிக்கையிலான சடலங்கள் ஷகாஹோலா வனப்பகுதியில் காணப்படலாம் என அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையான கென்யாவில் இதுபோன்ற மத அடிப்படைவாத அமைப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.
@reuters
பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை
மேலும், கைதாகியுள்ள போதகர் பால் மெக்கன்சி மீது பயங்கரவாத வழக்கு பதியவும் அதிக வாய்ப்பிருப்பதாக உள்விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள் எனவும், பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை பட்டினி வழிபாட்டுக்கு கட்டாயப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை மீட்கப்பட்ட சடலங்களில் சரிபாதி சிறார்கள் என்றே கூறுகின்றனர். முதலில் சிறார்கள், அதன் பின்னர் பெண்கள் இறுதியில் ஆண்கள் என பட்டினி வழிபாட்டுக்கு மக்களை தயார் படுத்தியுள்ளனர்.
மேலும், ஒரு குழிக்குள் 6 சடலங்கள் வரையில் காணப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இதுவரை மீட்கப்பட்டுள்ள சடலங்களுக்கு உடற்கூறு ஆய்வுகள் முடிக்கப்பட்ட பின்னர், மீண்டும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
@reuters
சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அந்த பகுதியில், தொடர்புடைய தேவாலயத்தில் இருந்து பட்டினி வழிபாட்டில் கலந்துகொண்டவர்களில் 34 பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
வனப்பகுதியில், புதர் மண்டிய பிரதேசங்களில் இன்னமும் மக்கள் தங்கள் மரணத்தை எதிர்பார்த்து பட்டினியுடன் காணப்படலாம் எனவும், அவர்களை மிக விரைவில் மீட்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.