டிஜிட்டல் ஐ.டிகளை உருவாக்க இருக்கும் கென்யா அரசாங்கம்!
கென்யா நாட்டின் டிஜிட்டலாக அடையாளப்படுத்தும் திட்டம் நிராகரிக்க பட்டு 1 வருடம் கடந்துள்ள நிலையில், மீண்டும் அதனை முயற்சி செய்து பார்க்க இருக்கிறது கென்யா அரசாங்கம்.
எலியூட்.ஓ.ஓவாலோ என்பவர் கென்யா நாட்டு டிஜிட்டல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அமைச்சரவை செயலாளர் ஆவார்.இந்த ஆண்டு ஜனவரியில் கென்யா நாட்டு ஒளிபரப்பாளரான சிடிஸன் டிவியில் கூறியுள்ளதாவது;அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே மெய்நிகர் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கு எங்களுக்கு டிஜிட்டல் அடையாளம் தேவை"என குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் ஐ.டி
கென்யா ஜனாதிபதி வில்லியம் ரூடோ இதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் 2024ம் ஆண்டளவில் டிஜிட்டல் ஐ.டிகளை கென்ய அரசாங்கம் வெளியிடும் எனவும் கூறியுள்ளார்..
இந்த டிஜிட்டல் முறையினை அறிமுகப்படுத்த மே மாதம் 2019ல் 47.5 மில்லியனில் 36 மில்லியன் மக்களின் கைரேகை மற்றைய தரவுகள் போன்றவை எடுக்கப்பட்டது ஆனாலும் ஒதுக்கப்பட்ட சமூகத்தினரை இதில் சேர்க்கவில்லை எனவும் அவர்களிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை,அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா?எனவும் கேள்விகளை எழுப்புகின்றனர் .
இந்த முன்னேற்றங்கள் இழுபறி நிலையில் இருந்தாலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரூட்டோ அரசாங்கம் ஒரு வருடத்திற்குள் டிஜிட்டல் ஐடிகளை வெளியிடுவதற்கான திட்டங்களை புதுப்பித்துள்ளது.
கென்ய அரசாங்கம் அதன் திட்டங்களின் விவரங்களை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், அணுக கடினமாக இருக்கும் மற்றும் விலக்கப்படக்கூடிய குழுக்களின் கண்ணோட்டத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று லண்டனில் உள்ள ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான பிரைவசி இன்டர்நேஷனலின் மூத்த ஆராய்ச்சி அதிகாரி டாம் ஃபிஷர் கூறியுள்ளார்.
"அரசாங்கம் அதன் வடிவமைப்பைப் பற்றி வெளிப்படையாக இருக்க வேண்டும், பரந்த நீண்ட கால ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் மக்களுக்கு கூடுதல் தகவல்களை வழங்க வேண்டும், எனவே இறுதியில் இன்னும் உள்ளடக்கிய அமைப்பு உள்ளது" என்று ஃபிஷர் கூறினார்.