Miss World America பட்டத்திற்காக போட்டியிடும் கேரள பெண்.., யார் அவர்?
'மிஸ் வோல்டு அமெரிக்கா' (Miss World America) போட்டியில் பங்கேற்கவுள்ள கேரள பெண் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கேரள பெண்
இந்திய மாநிலமான கேரளா, பத்தினம்திட்டா மாலவட்டம் கைப்பட்டூர் செறிவுகால் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஜான் மேத்யூ மற்றும் ராஜி மேத்யூ. இவர்களுடைய மகள் மீரா தங்கம் மேத்யூ.
ஜான் மேத்யூவின் குடும்பம் முதலில் கேரள மாநிலத்தில் தான் இருந்தது. அப்போது தான் அவருடைய மகள் மீரா தங்கம் மேத்யூ பிறந்தார்.
இதையடுத்து, தன்னுடைய 3 வயதில் மீரா தங்கம் மேத்யூ அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அப்போது இருந்து அவர் அங்கே தான் வாழ்ந்து வருகிறார்.
அங்கு, நியூயார்க்கில் உள்ள ஸ்டேட்டன் தீவில் வசித்து வருகிறார். இவருக்கு மாடலிங் துறையில் விருப்பம் இருந்ததால், அதற்காக பல போட்டிகளில் பங்கேற்றார். அதனால், 'மிஸ் ஸ்டேட்டன் ஐலேண்ட்' (Miss Staten Island) என்ற பட்டத்தையும் வென்றார்.
அந்த வரிசையில் கடந்த 2022 -ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற 'மிஸ் இந்தியா' (Miss India) என்ற பட்டத்தை வென்றார்.
தற்போது, மிஸ் வோல்டு அமெரிக்கா' (Miss World America) பட்டத்திற்காக போட்டியில் பங்கேற்க உள்ளார். இவர், நியூயார்க்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பட்டங்களின் ஒன்றான மிஸ் லிபர்ட்டியாக வருகிறார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணான மீரா, அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |