வெளிநாடொன்றில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கேரளப் பெண்: கணவன் மீது புகார்
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்துவந்த பெண்ணொருவர் தனது குடியிருப்பில் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கேரளப் பெண்
அமீரகத்தில் வாழ்ந்துவந்த கேரளப் பெண்ணான அதுல்யா சேகர் (30) என்னும் பெண், தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் சனிக்கிழமையன்று உயிரற்றநிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இம்மாதம் 18 மற்றும் 19ஆம் திகதிவாக்கில் அதுல்யாவை அவரது கணவரான சதீஷ் பிளேட்டால் அடித்ததாகவும், வயிற்றில் மிதித்ததாகவும், கழுத்தை நெறித்ததாகவும், அதனால் அதுல்யா உயிரிழந்ததாகவும் அவரது தாயார் பொலிசில் புகாரளித்துள்ளார்.
ஏற்கனவே கூடுதல் வரதட்சிணை கேட்டு அதுல்யாவை சதீஷ் கொடுமைப்படுத்திவந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்திய பொலிசார் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளார்கள்.
தம்பதியருக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில், அவள் கேரளாவில் தன் தாத்தா பாட்டியுடன் தங்கியிருக்கிறாள்.
இந்நிலையில், சதீஷ் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், அதுல்யா உயிரிழக்கும்போது தான் வீட்டில் இல்லையென்றும், தான் வீட்டுக்கு வரும்போது அவர் உயிரிழந்து கிடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |