ஐரோப்பாவை விட்டு கத்தாருக்கு மக்கள் இடம்பெயர நினைக்கிறார்கள்! இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்
கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
செழிப்பாக வளரும் மத்திய கிழக்கு நாடுகள்
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடந்து வருவதால் சர்வதேச நாடுகளின் கவனம் மத்திய கிழக்கு நாடுகள் மீது திரும்பியுள்ளது.
லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தாருக்கு போட்டிகளை காண சென்றுள்ளனர். இதன்மூலம் அந்நாட்டு பெருமளவில் வருவாயை ஈட்டியுள்ளது.
@Filadendron | E+ | Getty Images
கெவின் பீட்டர்சன் ட்வீட்
இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் மத்திய கிழக்கு நாடுகள் குறித்து ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டில், 'இன்னும் சில நாட்களில் கத்தார், சவுதி மற்றும் துபாய் ஆகிய மத்திய கிழக்கு நாடுகள் செழித்து வருகின்றன.
Qatar, Saudi & Dubai in a few days. The Middle East is thriving. Economically stable and growing fast, safe & secure, education A Grade & sun shines where everyone is smiling. I can see why so many people have moved and are considering leaving Europe to live here! #ThePlaceToBe
— Kevin Pietersen? (@KP24) December 14, 2022
பொருளாதார ரீதியாக நிலையானது மற்றும் வேகமாக வளரும் பாதுகாப்பு, A கிரேடு கல்வியைக் கொண்டு வளர்வதால் அங்கு அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஐரோப்பாவை விட்டு இங்கு இவ்வளவு பேர் வாழ நினைக்கிறார்கள், ஏன் இடம் பெயர்கிறார்கள் என்பதை என்னால் பார்க்க முடிகிறது!' என தெரிவித்துள்ளார்.
@Google