கமேனியின் இறுதிச்சடங்கில் காணப்பட்ட 3 மகன்கள்., தென்படாத மொஜ்தபா
ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி கமேனி, பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தார்.
அவரது இறுதிச்சடங்கு இன்று (ஜூலை 5) தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கோமேனி மசல்லாவில் நடைபெற்றது.
மூன்று மகன்கள்
இந்த நிகழ்வில் கமேனியின் மூன்று மகன்கள் மொஸ்தபா, மெய்சம் மற்றும் மசூத் ஆகியோர் அவரது உடலுடன் பிரார்த்தனை செய்தனர்.

ஆனால், அவரது அரசியல் வாரிசும், புதிய உச்சத் தலைவராக அறிவிக்கப்பட்ட மொஜ்தபா கமேனி, பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை.
அவர் தாக்குதலில் கடுமையாக காயமடைந்ததாகவும், முகம் சிதைந்து மற்றும் கால்களில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மசூத் கமேனி, கண்ணீரை துடைத்தபடி பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன் மற்றும் பாராளுமன்றத் தலைவர் முகமது பாகர் கலிபாப் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
கமேனெயின் உடல் அடுத்த சில நாட்களில் கும், நஜஃப், கர்பலா, மஷ்ஹத் போன்ற முக்கிய ஷியா மத நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக மஷ்ஹதில் அடக்கம் செய்யப்படும்.
இந்த நிகழ்வுகள், இரானியர்களின் மத உணர்வையும் அரசியல் ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |