முக்கிய தலைவரின் பெயரை மேடையிலேயே மாற்றி அழைத்த குஷ்பு.., ஆவேசமாக பேசும் போது தடுமாற்றம்
சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் நடிகையும், தேசிய மகளிர் உறுப்பினருமான குஷ்பு மேடையிலேயே முக்கிய அரசியல் தலைவரின் பெயரை மாற்றி அழைத்துள்ளார்.
மக்களவை தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேலைகளை மும்முரமாக செய்து வருகிறது.
அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வந்து மக்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில், சேலம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன், குஷ்பு, சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குஷ்பு பேசியது
இந்த பொதுக்கூட்டத்தில் குஷ்பு பேசுகையில், "இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வரும் போது கூடுகின்ற கூட்டமானது திமுகவுக்கு வரும் காசு கொடுத்து வரும் கூட்டம் கிடையாது.
இந்த தேர்தலில் முக்கியமான விடயத்தை மட்டும் தான் பார்க்க வேண்டும். இந்த மக்களவை தேர்தலில் 400 இடங்களை தாண்டி நிச்சயமாக வெற்றி இருக்கும். ஆனால், தமிழகத்தில் இருந்து எத்தனை சீட் ஜெயித்து மோடி கையில் கொடுக்க போகிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது.
அத்தனை பெரிய தலைவர்கள் மேடையில் இருக்கிறார்கள் என்று தலைவர்களின் பெயரை சொல்லும் போது ஓ.பி.எஸ் (ஓ.பன்னீர்செல்வம்) பெயரை இ.பி.எஸ் (எடப்பாடி பழனிசாமி) என்று மாற்றி அழைத்துள்ளார்.
அதாவது மேடையில், இ.பி.எஸ், சரத்குமார், டிடிவி தினகரன் இருக்கிறார்கள் என்று கூறினார். நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் மோடியால் மட்டுமே முடியும்.
கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார்.
பாஜக சார்பில் அத்தனை பேரை நாம் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப போகிறோம் என்பது உறுதி" என்று பேசினார்.