'அன்பான நண்பர்' புடினுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்: கிம் ஜாங் உன்
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது புத்தாண்டு வாழ்த்துக் குறிப்பில் புடினை அன்பான நண்பர் என குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டு வாழ்த்து
2025ஆம் ஆண்டு புத்தாண்டு தொடங்க உள்ள நிலையில், ரஷ்யா மற்றும் வடகொரியா இருதரப்பு உறவுகளைப் பாராட்டி கிம் ஜாங் உன் வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில் விளாடிமிர் புடினை (Vladimir Putin) "அன்பான நண்பர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வடகொரிய தலைவர், "சகோதர ரஷ்ய மக்களுக்கும், துணிச்சலான ரஷ்ய இராணுவத்தின் அனைத்து பணியாளர்களுக்கும், கொரிய மக்கள் மற்றும் DPRKயின் ஆயுதப் படைகளின் அனைத்துப் பணியாளர்கள் சார்பாகவும் அன்பான வாழ்த்துக்கள். ரஷ்ய இராணுவமும், மக்களும் நவ-நாசிசத்தை தோற்கடித்து ஒரு பெரிய வெற்றியை அடையும் ஆண்டாக 2025 இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2024யில் அர்த்தமுள்ள பயணத்திற்குப் பிறகு, புதிய திட்டங்களை வடிவமைத்து முன்னோக்கி நகர்த்துவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
புடின் அனுப்பிய செய்தி
இருதரப்பு உறவுகளைப் பாராட்டி கிம்முக்கு இதேபோன்ற செய்தியை புடின் வெள்ளிக்கிழமை அனுப்பியதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
மாஸ்கோவில் இருந்து மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பெற கிம் ஆர்வமாக இருப்பதாகவும், அதற்கு பதிலாக தனது படைகளுக்கு போர் அனுபவத்தைப் பெறவும் ஆர்வமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
உக்ரைனுடன் போரிட ரஷ்யாவுக்கு உதவுவதற்காக 10,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அணு ஆயுதம் கொண்ட வடகொரிய அனுப்பியதாக முன்னர் அமெரிக்காவும், தென்கொரியாவும் குற்றம்சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |