வடகொரியாவில் 'ஐஸ்-கிரீம்' உள்ளிட்ட வார்த்தைகளுக்கு தடை விதித்த கிம்: என்ன காரணம்?
தங்கள் நாட்டில் ஆங்கில வார்த்தைகள் சிலவற்றை பயன்படுத்த, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆங்கில வார்த்தைகள்
வடகொரியாவின் புதிய Wonsan கடற்கரை விடுதியில் உள்ள சுற்றுலா வழிகாட்டிகள், மேற்கு மற்றும் அதன் அண்டை நாடான தென் கொரியாவில் பிரபலமான ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஐஸ் கிரீம், ஹாம்பர்கர் மற்றும் கரோக்கி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த ஜனாதிபதி கிம் ஜாங் உன் (Kim Jong Un) தடை விதித்துள்ளார். ஏனெனில் அவை மேற்கத்திய வார்த்தைகள் என்று அவர் குறிப்பிடுகிறார்.
அதற்கு பதிலாக சுற்றுலா வழிகாட்டிகள் dajin-gogi gyeopppang மற்றும் Eseukimo போன்ற உள்ளூர் சொற்களைப் பயன்படுத்த அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடகொரிய உள்ளூர் கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளை ஊக்குவிக்கும் முயற்சியில், அத்தகைய வார்த்தைகளுக்கு அதன் சொந்த சொற்களை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |