இனி எந்த உறவும் வேண்டாம்... கிம் ஜோங் தொடர்பில் தென் கொரிய முன்னாள் ஜனாதிபதியின் உருக்கமான முடிவு
நாய்களை கிம் ஜோங் உன் நினைவுப் பரிசாக தென் கொரிய ஜனாதிபதிக்கு வழங்கியிருந்தார்.
விதிகளை மீறி, ஜனாதிபதி மூன் அந்த நாய்களை இனி கவனித்துக் கொள்வார் என அனுமதி
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் பரிசாக அளித்த நாய்களை இனி கவனித்துக்கொள்வதாக இல்லை என தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி மூன் ஜே இன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 உச்சி மாநாட்டில் இரு நாடுகளும் பங்கேற்று, சுமூகமான உறவைப் பேணுவதாக எடுத்துக்கொண்ட முடிவின் அடிப்படையில் குறித்த நாய்களை கிம் ஜோங் உன் நினைவுப் பரிசாக வழங்கியிருந்தார்.
அந்த இரு நாய்களையும் தென் கொரிய ஜனாதிபதி மூன் தமது கவனிப்பில் வைத்துக் கொண்டதுடன், ஆட்சியில் இருந்தும் விலகிய பின்னர் தமது தனிப்பட்ட குடியிருப்புக்கும் கொண்டு சென்றுள்ளார்.
பொதுவாக ஜனாதிபதிக்கு கிடைக்கும் பரிசுகள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்றாலும், நாய்கள் தொடர்பில் ஜனாதிபதி மூன் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளவர் என்பதால், முதன்முறையாக விதிகளை மீறி, ஜனாதிபதி மூன் அந்த நாய்களை இனி கவனித்துக் கொள்வார் என அனுமதி அளிக்கப்பட்டது.
@reuters
மட்டுமின்றி, பொருளாதார உதவிகளும் முன்னெடுக்கும் பொருட்டு தென் கொரிய நாடாளுமன்றம் சட்டத்திருத்தம் ஒன்றையும் மேற்கொண்டது. ஆனால் அரசியல் சூழல் காரணமாக தற்போதைய ஜனாதிபதி யூன் சுக்- யோல் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி மூன் அந்த நாய்களை வளர்ப்பதில் அரசாங்கம் ஒப்புதல் அளிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து அந்த நாய்களை அரசாங்கம் வசம் ஒப்படைக்கவும் தாம் தயார் என ஜனாதிபதி மூன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஜனாதிபதி யூன் அலுவலகம் இது தொடர்பான தகவல்களை மறுத்துள்ளதுடன், அதிகாரிகள் தரப்பில் ஆலோசனையில் மட்டுமே இருப்பதாகவும், இதில் அரசியல் ஆதாயம் தேடவில்லை எனவும் ஜனாதிபதி யூன் அலுவலககம் விளக்கமளித்துள்ளது.
மட்டுமின்றி, நாய்கள் தொடர்பில் ஜனாதிபதி மூன் மாதந்தோறும் பெற்றுவரும் 1,800 டொலர் மானியத்தை ரத்து செய்வது தொடர்பிலும் விவாதிக்கப்பட்டதாக உள்ளூர் நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால், உள்விவகாரத் துறை அமைச்சகம் இதுவரை இந்த விவகாரம் தொடர்பில் உறுதியான கருத்து எதையும் வெளியிடவில்லை என்றே தெரியவந்துள்ளது.