பெரும் நெருக்கடியில் வட கொரியா... உயர் அதிகாரிகளை விளாசிய கிம்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை முகம்
வட கொரியாவில் கொரோனா பெரும் நெருக்கடியை ஏற்படுத்த காரணமான குறைபாடுகள் குறித்து அதிபர் கிம் ஜாங்-உன் உயர் அதிகாரிகளை கடுமையாக கண்டித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
கட்சி தலைவர்களுடனான சிறப்பு கூட்டத்தில் மூத்த அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாக கிம் குற்றம் சாட்டினார் என KCNA ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அதிகாரிகள் அலட்சியத்தால் நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதாக கூட்டத்தில் கிம் கொந்தளித்துள்ளார்.
KCNA வெளியிட்ட செய்தியின் மூலம் வட கொரியாவில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தியிருக்கக்கூடும் என வட கொரியாவை விட்டு வெளியேறிய ஆராய்ச்சியாளர் Ahn Chan-il தெரிவித்துள்ளார்.
அதேசமயம் வட கொரியாவுக்கு சர்வதேச உதவி தேவைப்படலாம் என்பதற்கான சிக்னலாகவும் இது இருக்கலாம் என Ahn Chan-il குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் நாட்டில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என வட கொரியா சமீபத்தில் WHO-யிடம் தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.