பயங்கர அணு ஏவுகணையை காட்சிப்படுத்திய கிம் ஜாங்
உன் வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன், நாட்டிலேயே அதிக ஆற்றல் கொண்ட ஏவுகணை என கருதப்படும் ஆயுதம் ஒன்றை காட்சிப்படுத்தி தன் பெருமையை உலகுக்கு விளம்பரப்படுத்தியுள்ளார்.
நாட்டிலேயே அதிக ஆற்றல் கொண்ட ஏவுகணை
கொரியத் தொழிலாளர் கட்சி நிறுவப்பட்டதன் 80ஆவது ஆண்டு விழாவின்போது இந்த அணு ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது.
Hwasong-20 ICBM என அழைக்கப்படும் இந்த ஏவுகணை, ballistic வகை ஏவுகணை மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை ஆகும்.
அத்துடன், இந்த ஒரு ஏவுகணையிலேயே பல அணு குண்டுகளை இணைத்து ஏவமுடியும் என்பதால், பல இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை.
சமீபத்தில், solid-fuel rocket engine வகை ராக்கெட் ஒன்றை வடகொரியா ஏவி சோதனை செய்தது. அப்போதே, அந்த ராக்கெட் இந்த ஏவுகணைகளை சுமந்து செல்லும் நோக்கிலேயே சோதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
பல நாடுகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டுள்ள நிலையில், ஒரே ஏவுகணையில் பல குண்டுகளை இணைத்து தாக்கும்போது அவை இந்த பாதுகாப்பு அமைப்பை மீறி தங்கள் இலக்கைத் தாக்கக்கூடும்.
சமீபத்தில், அவ்வகை ஏவுகணைகளை தயாரிக்க அழைப்புவிடுத்திருந்தார் கிம். ஆக, இந்த Hwasong-20 ICBM ஏவுகணை, அப்படி ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை மீறி தாக்கக்கூடிய திறன் கொண்டவையாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டபின் தன் நாட்டு மக்கள் முன் உரையாற்றிய கிம், தங்கள் எதிரிகளை நசுக்கிவிடுவோம் என சூளுரைத்தார்.
நமது ராணுவம், அனைத்து அச்சுறுத்தல்களையும் அழிக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு விடயமாக தொடர்ந்து வளர்ச்சியடையவேண்டும் என்றும் கூறியுள்ளார் கிம்.
அந்த நிகழ்ச்சியில், சீன பிரீமியரான Li Qiang, முன்னாள் ரஷ்ய ஜனாதிபதியான Dmitry Medvedev மற்றும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலரான To Lam ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |