மன்னர் சார்லஸ் முடிசூட்டுவிழா: பிரான்சில் எதிர்ப்பும் ஆதரவும்
பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டாலும், ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமாரானபின் இரு நாடுகளும் சற்றே நட்பு பாராட்டிவருவதுபோல் தெரிகிறது.
மன்னர் சார்லஸ் முடிசூட்டுவிழா: பிரான்சில் எதிர்ப்பா ஆதரவா?
இந்நிலையில், பிரித்தானிய மன்னராக சார்லஸ் முடிசூட்டப்பட்டுள்ளார். ஆக, பிரான்ஸ் சார்லசுக்கு ஆதரவா அல்லது எதிர்ப்பா என்றால், அவரது முடிசூட்டுவிழாவை வைத்துப்பார்த்தால், இரண்டுமே உள்ளதுபோல் தெரிகிறது.
ஆதரவு
மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழா நிகழ்ச்சியை பிரான்சில் சுமார் 9 மில்லியன் பேர் தொலைக்காட்சியில் நேரலையில் பார்வையிட்டுள்ளார்கள்.
பிரான்ஸ் ஊடகங்கள் முடிசூட்டுவிழாவிற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளித்துள்ளன. பல ஊடகங்களில் மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழா தலைப்புச் செய்தியானதுடன், தொலைக்காட்சி சேனல்கள் பலவற்றில் அது தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.
Photograph: Teresa Suárez/EPA
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்ற முடிசூட்டுவிழாவில் பங்கேற்றதுடன், மன்னருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
எதிர்ப்பு
ஆனால், இடதுசாரியினரிடையே, மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு காணப்படுகிறது.
La campaña publicitaria más cara de la historia pic.twitter.com/RdxLxP0pL2
— Martín Bianchi Tasso (@martinbianchi) May 6, 2023
இடதுசாரிக் கட்சி ஒன்றின் தலைவரான Jean-Luc Mélenchon, முடிசூட்டுவிழாவையும் மன்னரையும் மோசமாக விமர்சித்துள்ளார்.
அத்துடன், வேறு சில இடது சாரியினரும், மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது இதெல்லாம் தேவையா என்கிற ரீதியில் விமர்சித்துள்ளனர். சிலரோ, பிரான்ஸ் ஊடகங்கள் ஏன் பிரித்தானிய மன்னருடைய முடிசூட்டுவிழாவுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.