மன்னர் சார்லஸ் பிரான்ஸ் பயணத்தில் மாற்றம்?: வன்முறை வெடிக்கலாம் என அச்சுறுத்தல்
இம்மாதம் 26ஆம் திகதி, அதாவது வரும் திங்கட்கிழமை, பிரித்தானிய மன்னர் சார்லசும், ராணி கமீலாவும், அரசு முறைப்பயணமாக பிரான்ஸ் செல்ல இருக்கிறார்கள்.
வன்முறை வெடிக்கலாம் என அச்சுறுத்தல்
ஆனால், பிரான்சில், ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கொண்டு வரும் சட்டத்துக்கு எதிராக போராட்டக்காரர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளார்கள்.
சில இடங்களில் வன்முறையும் வெடித்துள்ளது.
Credit: PA
ஆகவே, மன்னர் சார்லஸ் பிரான்ஸ் வரும் நேரத்தில் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சுறுத்தல் உள்ளதால், அவரது பயணத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
என்ன மாற்றம்?
அதாவது, மன்னருக்கும் ராணிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி பிரம்மாண்டமான விருந்தொன்றை ஏற்பாடு செய்துள்ளார். அந்த விருந்து, பிரான்சிலுள்ள Palace of Versailles என்னும் ராஜ அரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Credit: Getty
ஆனால், இப்போதைய சூழலில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதால், அந்த விருந்து நிகழ்ச்சி, வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
அது, பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான எலிசி மாளிகைக்கு மாற்றப்படலாம் என கருதப்படுகிறது.
Credit: AFP
Credit: AFP