ராஜநாகம் என்னை இருமுறை கடித்தவுடன் செத்துவிட்டது! பாம்புடன் வந்து பகீர் கிளப்பிய நபர்... வீடியோ காட்சி
இந்தியாவில் நபர் ஒருவரை இரண்டு முறை கடித்ததால் கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் உயிரிழந்ததாக வெளியான தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சலாவுதின் மன்சூரி (35). இவர் மது போதையில் இறந்த ராஜ நாகத்துடன் மருத்துவமனைக்கு வந்த நிலையில் மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள்.
மன்சூரி மருத்துவர்களிடம் கூறுகையில், நான் ரயில் நிலையம் வழியாக வீடு திரும்பிய போது எனக்கே தெரியாமல் ராஜ நாகத்தை மிதித்ததால் என் காலில் கடித்துவிட்டது. உடனே அதை எனது வெறும் கைகளால் பிடித்து, நான் இறந்துவிடுவேன், ஆனால் உன்னையும் வாழ விட மாட்டேன் என்று அதை பலமுறை அடித்தேன்.
அப்போதுதான் அது என் கையையும் கடித்த நிலையில் பின்னர் உயிரிழந்துவிட்டது என கூறினார்.
மேலும் பாம்புக்கடிக்கு சிகிச்சையளிக்க ஆன்டி-வெனம் ஊசி போட வேண்டும் என்றும் கூறிக்கொண்டே இருந்தார்.
உலகில் மிகவும் விஷம் கொண்ட ராஜநாகம் இரண்டு முறை கடித்தும் அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது ஆச்சரியமளிக்கிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.