2 மாஸ்க் அணிந்தால் கொரோனா தாக்காது! எப்படி அணிவது? WHO அறிவுரை
துணி மற்றும் அறுவைசிகிச்சை முகக்கவசத்தை பயன்படுத்தி இரட்டை முகக்கவசமாக அணிவதமுலம் கொரோனா தொற்று ஏற்படுவதை பெருமளவில் தடுக்கலாம் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கோவிட்-19க்கு எதிரான போட்டத்துக்கு மத்தியில், சுகாதார வல்லுநர்கள் இரண்டு முகக்கவசங்களை (Double Mask) பயன்படுத்த ஊக்குவிக்கின்றனர். இது, கொடிய நோய்க்கு எதிராக ஒரு வலுவான தடையை உருவாக்கக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
துணியால் ஆன ஒரு முகக்கவசம் மற்றும் அறுவைசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முகக்கவசம் ஆகிய இரண்டையும் இணைத்து பயன்படுத்துவது மூலம், மூக்கு மற்றும் வாய் பகுதிகளை முற்றிலுமாக மறைத்து, காற்று கசிவதைத் தடுக்கலாம் என்று அமெரிக்காவின் Centers for Disease Control and Prevention (CDC) ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
ஒரு முகக்கவாசத்தை விட, இரட்டை முககைவசம் அதிகபட்சம் 95 சதவீதம் வரை பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
டபுள் மாஸ்க் அணிவது எப்படி?
நமக்கு மூச்சுத் திணறல் இல்லாமல் சரியான முறையில் அணிந்தால் மட்டுமே இரட்டை முகக்கவசம் நன்மை பயக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு அறுவை சிகிச்சை முகக்கவாசத்தின் மேல் ஒரு துணி முகக்கவாசத்தை இணைத்தால் மட்டுமே சரியாக உதவும், இது உங்களை கொடிய வைரஸிலிருந்து விலக்கி வைக்கும் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை குறைக்காது.
CDC மேற்கொண்ட ஆய்வுகளின்படி, இரட்டை முகக்கவசம் அணிவதற்கான இரண்டு வழிகள் காணப்பட்டன.
1. முடிச்சு போடப்படாத மாஸ்க்: (Unknotted Mask)
முடிச்சு போடப்படாத அறுவை சிகிச்சை மாஸ்க் அணிந்து, அதற்கு மேல் துணி மாஸ்க் அணியலாம். ஆனால் அது 56.6 சதவீதம் வரை மட்டுமே பாதுகாப்பை வழங்கும் என தெரியவந்துள்ளது.
2. முடிச்சு போட்ட மாஸ்க்: (knotted Mask)
முதலில் முடிச்சு போட்ட அறுவை சிகிச்சை மாஸ்க் அணிந்து, அதற்கு மேல் துணி மாஸ்க் அணியலாம். இதன் மூலம் 85.4 சதவீத பாதுகாப்பை பெற முடியும்.
முக்கிய குறிப்பு: N95 முகக்கவசத்தை பயன்படுத்துபவர்கள், இந்த இரட்டை கவசத்தை அணியவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், N95 முகக்கவசம் 95 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும். இது மிகவும் தரமான ஒன்று (gold standard one) என்றும் இது நமது முகத்தை சிறப்பாக மறைக்க உதவும் என கூறப்படுகிறது.