இராணுவத் தளத்தை கைப்பற்றி தீ வைத்த பிரபல இன கிளர்ச்சிக் குழு! எந்த நாட்டில் தெரியுமா? வெளியான வீடியோ
கிழக்கு மியான்மரில் தாய்லாந்து எல்லைக்கு அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு முக்கிய இன கிளர்ச்சிக் குழு, ஒரு மியான்மர் இராணுவ தளத்தைத் தாக்கி கைப்பற்றி தீ வைத்துள்ளது.
பிப்ரவரி 1-ஆம் திகதி ஆட்சி கவிழ்ப்பில் அரசு தலைவர் ஆங் சான் சூகியை இராணுவம் கைது செய்ததிலிருந்து மியான்மர் கொந்தளிப்பில் உள்ளது. இது நாடு முழுவதும் ஒரு எழுச்சியைத் தூண்டியது.
கடந்த மூன்று மாதங்களாக மியான்மர் பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களுக்கு எதிராக கொடூரமான தாக்குதல்களை நடத்தி 750-க்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்துள்ளனர்.
ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு இயக்கம் நாடு முழுவதும் பரந்த ஆதரவைப் பெற்றுள்ளது, இதில் மியான்மரின் ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்கள் சில உள்ளன, அவை பல தசாப்தங்களாக இராணுவத்திற்கு எதிராக சுயாட்சிக்காக போராடி வருகின்றன.
The Myanmar Military weapons seized by KNU armed this morning as they captured the junta’s armed base near Myanmar-Thailand boarder. #WhatsHappeningInMyanmar pic.twitter.com/MbLnhzmfyx
— Thang Deih Tuang (@ThangDeihTuang) April 27, 2021
மிகவும் குரல் கொடுக்கும் குழுக்களில் ஒன்றான கரேன் நேஷனல் யூனியன் (Karen National Union) மியான்மரின் கிழக்கு எல்லையில் உள்ள இராணுவத்துடன் தங்கள் பிராந்தியத்தில் பல வாரங்களாக மோதிவந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை கரேன் மாநிலத்தில் சால்வீன் ஆற்றின் அருகே தாய்லாந்து எல்லைப் பகுதியில் சண்டை வெடித்தது. அதில் மியான்மர் இராணுவத் தளம் கைப்பற்றப்பட்டு, தீ வைக்கப்பட்டது. மேலும், மையம் இராணுவத்தின் ஆயுதங்களையும் KNU கைப்பற்றியது.
தாய்லாந்தில் வசிப்பவர்கள் மியான்மருக்குள் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடப்பதைப் பார்த்துள்ளனர். மேலும் தாய்லந்து பகுதியிலிருந்து மியான்மர் பகுதியில் தீப்பிடித்து எரிவதையும் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் "எங்கள் துருப்புக்கள் பர்மிய இராணுவ முகாமை கைப்பற்றின" என்று KNU-வின் வெளியுறவுத் தலைவர் Padoh Saw Taw Nee ஊடகங்களிடம் கூறியுள்ளார். மேலும் சண்டை அதிகாலை 5 மணியளவில் நடந்தது என்று கூறினார்.
மியான்மர் இராணுவத்திடம் பதிலடி கொடுக்கும் என்ற அச்சத்தில் சில கிராமவாசிகள் ஏற்கனவே தங்கள் வீடுகளை மற்ற நகரங்களுக்கு விட்டுச் சென்றிருந்தனர்.
சமீபத்திய வாரங்களில் கரேன் மாநிலத்தில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன, தாய்லாந்து தரப்பில் தற்காலிகமாக அடைக்கலம் தேடுவதற்காக ஆற்றைக் கடந்த 2,000 பேர் உட்பட 24,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
Smoke rising from a #Myanmar military base along the bank of the Salween river, as seen from Mae Sam Laep town in Thailand's Mae Hong Son province, after the base was attacked and captured by #KNU as the country remains in turmoil after the February 1 military coup. Photo: AFP pic.twitter.com/kTlVp3HdYh
— Mizzima News (@MizzimaNews) April 27, 2021