புடினின் நீண்டகால ஆதரவாளரான.,கிரெம்ளின் துணைத் தலைமை தளபதி பதவி விலகல்
கிரெம்ளின் துணைத் தளபதி பதவியை டிமிட்ரி கோஸாக் ராஜினாமா செய்தார்.
டிமிட்ரி கோஸாக்
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) நீண்டகால ஆதரவாளராக இருந்தவர் டிமிட்ரி கோஸாக் (Dmitry Kozak).
சோவியத் உக்ரைனின் கிரோவோஹ்ராட் பகுதியில் பிறந்த இவை, 1990களில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பணியாற்றினார். அப்போது புடின் மேயராக இருந்தார்.
அதனைத் தொடர்ந்து 1999ஆம் ஆண்டு கூட்டாட்சி அரசாங்கத்தில் சேர்ந்த கோஸாக், அடுத்த ஆண்டு புடினைத் தொடர்ந்து கிரெம்ளின் வந்தார். பின்னர் கிரெம்ளின் துணைத் தலைமைத் தளபதியாக பணியாற்றி வந்தார்.
ராஜினாமா
இந்த நிலையில் கோஸாக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக உயர் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த மாதம் புடினின் ஆதரவை கோஸாக் இழந்துவிட்டதாகவும், 2022 உக்ரைன் படையெடுப்பை அவர் எதிர்த்ததையும் குறிப்பிட்டு நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து அவரது விலகல் வந்துள்ளது.
மேலும், செல்வாக்கு மிக்க முதல் துணைத் தலைவரான செர்ஜி கிரியென்கோவிடம் முக்கிய பொறுப்புகளை கோஸாக் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கோஸாக் தனியார் துறையில் பணிபுரிய சலுகைகளை எடைபோட்டு வருவதாக வணிக செய்தி நிறுவனமான RBC தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |