ஏன் பயந்துட்டு இருக்கீங்க.. நான் பேசுனா அவ்ளோ பயமா? ஆவேசமாக வீடியோ வெளியிட்ட குஷ்பு
தமிழக அரசு பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கும் ரூ.1000 உரிமைத் தொகை தொடர்பாக குஷ்பு பேசிய கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குஷ்பு பேசியது என்ன?
நடிகையும், தேசிய மகளிர் உறுப்பினருமான குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பில், "பெண்களுக்கு ரூ.1000 ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா? தமிழ்நாட்டில் 3500 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் திமுகவின் ஆள் தானே? அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்ல போகிறார்" என பேசியிருந்தார்.
இவர் பேசிய கருத்து தான் தற்போது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஷ்புவின் உருவ பொம்மைகளை எரித்து திமுகவைச் சேர்ந்த மகளிர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வீடியோ வெளியிட்ட குஷ்பு
இந்நிலையில் பூச்சாண்டி காட்டாதீர்கள் என்று நடிகை குஷ்பு தான் பேசியது குறித்து விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவர் அந்த வீடியோவில், "நான் கூறிய கருத்தை தவறாக எடுத்துக் கொண்டு திசை திருப்பாதீர்கள். பல காலமாக மக்களை திமுக ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்கிறேன். டாஸ்மாக்கை மூடிவிடுவோம் என்று சொன்னீர்கள், மூடிவிட்டீர்களா?
A simple message to our CM Thiru @mkstalin avl. pic.twitter.com/KeDQ1fHLZ8
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) March 13, 2024
பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் திமுக கட்சிக்காரரிடம் இருந்து கைப்பற்றப்பட்டு இருக்கிறது. செந்தில் பாலாஜி ஜெயிலில் உள்ளார். மக்களுக்கு நீங்கள் செய்த நல்ல விடயத்தை சொல்லுங்கள். அந்த தைரியம் திமுக தலைவருக்கும் இல்லை, தொண்டருக்கும் இல்லை.
பெண்களுக்கு நீங்கள் ரூ.1000 கொடுப்பதை விட டாஸ்மாக்கை மூடினால் பல ஆயிரம் சேமித்து குடும்பத்தை நடத்துவார்கள். இதை தான் நான் கூறினேன். அதை திசை திருப்பி பூச்சாண்டி காட்டாதீர்கள்" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |