ஈரானை ஆதரித்த குவைத் பெண் தொகுப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
குவைத்தின் அரசுத் தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெண் அரசுத் தொலைக்காட்சி தொகுப்பாளர்
குவைத்தில் ஜைனப் தஷ்டி (Zainab Dashti) என்ற பெண் அரசுத் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் சமூக ஊடகங்களில் ஈரானுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டார்.
அவர் இணையத்தில் வெளியிட்ட பதிவுகள் ஈரானுக்கு ஆதாரவாக இருந்ததாகக் கண்டறியப்பட்டது.
மூன்று ஆண்டுகள் சிறை
இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜைனப்பிற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குவைத்தில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் சமீபத்தில் அவருக்கு எதிரான தீர்ப்பை உறுதி செய்தது.
குவைத்தில், கடந்த சில மாதங்களாக ஊடகம் தொடர்பான விவகாரங்களில் மிகவும் விவாதிக்கப்படும் வழக்குகளில் ஒன்றாக தஷ்டியின் வழக்கு மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |