ரஷ்யாவிற்கு அடுத்த பேரிடி... இரண்டாவது பிராந்தியத்தை குறிவைக்கும் உக்ரைன்: சீறிப்பாய்ந்த Vampire ஏவுகணை
ரஷ்யா மீது துணிச்சலாக இரண்டாவது ஊடுருவலுக்கு தயாரான உக்ரைன், ரஷ்யாவின் Belgorod பகுதியில் Vampire ஏவுகணையால் உக்கிராமாக தாக்கியுள்ளது.
மக்கள் செய்வதறியாது
வெளியான தகவல்களின் அடிப்படையில், வெள்ளிக்கிழமை மிக மோசமான தாக்குதலை உக்ரைன் தரப்பு ரஷ்ய நகரம் மீது முன்னெடுத்துள்ளது. இதில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் குறைந்தது 46 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரஷ்யாவின் Belgorod பகுதியில் உக்ரைனின் Vampire ஏவுகணைகள் சீறிப்பாய்ந்துள்ளதையும், பிரதான சாலையில் வாகனங்கள் தாக்குதலுக்கு இலக்கானதையும் உள்ளூர் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.
தாக்குதல் தொடங்கிய சில நிமிடங்களில் மக்கள் செய்வதறியாது ஸ்தம்பித்துப் போனதாகவும், அதன் பின்னர் வாகனங்களில் தப்பிக்க முயன்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குடியிருப்புகள் பல ஏவுகணை தாக்குதலில் சிக்கி தீக்கிரையாகியுள்ளது. இதனிடையே, Belgorod பகுதியில் இருந்து மக்களை வெளியேற்ற நடவடிக்கை முன்னெடுத்துள்ள ரஷ்ய ராணுவ வீரர்கள் வீடுகளை கொள்ளையிட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Belgorod பகுதியை
Belgorod பகுதியானது கடந்த டிசம்பர் மாதமும் உக்ரைன் படைகளின் தாக்குதலுக்கு இலக்கானது. ஆனால் தற்போது உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள் ஊடுருவ Belgorod பகுதியில் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஆகஸ்டு 6ம் திகதி அதிரடியாக ஊடுருவிய உக்ரைன் படைகள், பல கிராமங்களை கைப்பற்றியுள்ளது. தற்போது இரண்டாவது முறையாக Belgorod பகுதியை உக்ரைன் படைகள் நோட்டமிட்டுள்ளது.
இதனிடையே, Belgorod பகுதி ஆளுநர் Gladkov சமூக ஊடகத்தில் பதிவிடுகையில், Belgorod பிராந்தியம் மொத்தம் ஏவுகணை அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
Belgorod பிராந்தியத்தில் உள்ள Krasnoyaruzhsky மாவட்டத்தில் இருந்து 11,000 மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |