மீண்டும் கிரீஸின் பிரதமரானார் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்
கிரீஸில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் மீண்டும் பிரதமரானார்.
158 இடங்களில் வெற்றி
மே மாதம் 21ஆம் திகதி கிரீஸ் நாட்டில் பொதுத்தேர்தல் நடந்தது. அதில் 158 இடங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் மீண்டும் பிரதமரானார்.
அவரது நியூ டெமோகிரசி கட்சி மொத்தம் உள்ள 300 இடங்களில் 158 இடங்களை வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
EPA
வெற்றி உரை
கிரியாகோஸ் தனது வெற்றி உரையில், 'எங்களிடம் கிரேக்கத்தை மாற்றும் உயர் இலக்குகள் உள்ளன...இன்று நாம் நமது வெற்றியைக் கொண்டாடுவோம், நாளை நமது ஸ்லீவ்ஸை சுருட்டுவோம்' என தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பாரிய ரயில் விபத்து, தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு விவகாரம் ஆகியவற்றால் இவரது ஆட்சி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |