ரூ.9.2 கோடி என்று தெரியாமல் கருப்பு கல்லை வாசல் படியாக பயன்படுத்திவந்த மூதாட்டி
மூதாட்டி ஒருவர் விலைமதிப்பில்லாத கருப்பு கல் ஒன்றை தனது வீட்டின் வாசல் படியாக பயன்படுத்தி வந்துள்ளார்.
ரூ.9.2 கோடி மதிப்புடைய கல்
தென்கிழக்கு ரோமானியாவில் கோல்டி என்ற கிராமத்தில் வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர், தனது வீட்டில் அதிர்ஷ்டம் என்று தெரியாமலயே கல் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார்.
அவர், கடந்த 10 ஆண்டுகளாக அந்த விலைமதிப்பில்லா பொருளை பற்றி தெரியாமல் இருந்துள்ளார்.
அவர் ஒரு நாள் தனது வீட்டின் அருகில் உள்ள ஓடையில் இருந்த பளபளப்பான கல் ஒன்றை எடுத்து வந்துள்ளார். பின்னர், அதனை தனது வீட்டின் வாசல் படியாக பயன்படுத்தி வந்துள்ளார்.
அதாவது, மூதாட்டி தனது வீட்டில் வைத்திருந்த கல்லானது, இதுவரை உலகில் கிடைத்த பெரிய ஆம்பர் நக்கட்களில் (amber nugget) ஒன்றாகும். இதனுடைய எடை 3.5 கிலோ கிராம் ஆகும்.
இந்த கல்லின் மதிப்பு சுமார் 1.1 மில்லியன் டொலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 9.2 கோடி ரூபாய் ஆகும்.
உலகத்தில் மொத்தம் 160 ஷேட்களில் ஆம்பர் நக்கட்கள் கிடைக்கின்றன. இந்த கல்லானது கருப்பு ஆம்பர் நக்கட் ஆகும். முக்கியமாக, மூதாட்டி வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்தவர்களும் இதனை பற்றி அறியாமல் சென்றுள்ளனர்.
பின்னர், உறவினர் ஒருவர் அந்த கல்லை பார்த்து சந்தேகம் அடைந்து அதனை ஆய்வுக்கு அனுப்பினார். அப்போது தான் ஆம்பர் நக்கட் என்பது தெரியவந்தது.
இதுபற்றி அறிந்த ரோமானி அதிகாரிகள் மூதாட்டி வீட்டில் வைத்திருந்த கல்லை வாங்கி தேசிய செல்வமாக (National Tresure) அறிவித்தனர்.
இதன்பின், இந்த கல்லானது 38.5 முதல் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும் கண்டுபிடித்துள்ளனர். தற்போது, சாவ் மாகாண அருங்காட்சியகத்தில் இந்த ஆம்பர் நக்கட்டை வைத்திருக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |