ஜப்பானில் கொட்டித் தீர்த்த கனமழை: 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவு
ஜப்பானில் பெய்த கனமழை காரணமாக சுமார் 2 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பேரிடர் மேலாண்மை குழு எச்சரித்துள்ளது.
ஜப்பானில் கனமழை
ஜப்பானை கடந்த வாரம் மாவார் என்ற புயல் தாக்கியது, இதனால் ஜப்பானின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்த புயல் பொருளாதார பாதிப்புகளை ஒருபுறம் ஏற்படுத்தி இருப்பதுடன், இதில் பொதுமக்கள் சிலரும் உயிரிழந்து உள்ளனர்.
Flood damages road in Japan after rains from Tropical Storm Mawar#japan #rain #mawar #flood #rainfall pic.twitter.com/hh2Dr348SI
— News18 (@CNNnews18) June 9, 2023
இதற்கிடையே பல்வேறு பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து மற்றும் மீட்பு பணிகளை சீக்கலாக்கியுள்ளது.
பொதுமக்கள் வெளியேற்றம்
இந்நிலையில் நிலச்சரிவு அபாயம் இருக்கும் ஆபத்தான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
Kyodo News
நிலச்சரிவு மற்றும் கனமழை பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள 27,500 பேர் ஷிகவோகா மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொசாய் மற்றும் ஹமாமட்சு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 2 லட்சம் பேர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.