மது பிரியர்களின் வாகனங்களை பறித்து உக்ரைன் ராணுவத்திற்கு அளிக்கும் நாடு
லாட்வியா நாட்டில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டமொன்றை அங்குள்ள அதிகாரிகள் அமுலுக்கு கொண்டுவந்துள்ளனர்.
வாகனங்கள் பறிமுதல்
இதன் மூலமாக உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதையும் வெளிக்காட்ட முடியும் என லாட்வியா அரசாங்கம் நம்புகிறது. லாட்வியா நிதியமைச்சகம் முன்வைத்துள்ள புதிய திட்டத்தின்படி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் சிக்கினால், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உக்ரைன் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.
@getty
குறித்த திட்டத்தை லாட்வியா பிரதமரும் உறுதி செய்துள்ளதுடன், விளக்கமும் அளித்துள்ளார். மது அருந்திவிட்டு பொலிசாரிடம் சிக்கி அபராதம் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே வாகனத்தை பறிமுதல் செய்யும் முடிவுக்கு லாட்வியா வந்துள்ளது.
ஆனால் ஒரே மாதத்தில் 215 பேர்களின் வாகனம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தில் விடப்படும் எனவும், மிக குறைந்த கட்டணத்தில் அந்த வாகனங்களை வாங்கவும் முடியும்.
@SOPA Images
இருப்பினும் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கலின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ள நிலையிலேயே, உக்ரைன் ராணுவத்திற்கு வாகனங்களை கையளிக்கும் திட்டத்தை அதிகாரிகள் அமுலுக்கு கொண்டு வந்துள்ளனர்.
தற்போது வாகனங்களை உக்ரைனுக்கு அனுப்புவதற்கான நடைமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.