உலகில் குடியிருக்கவே முடியாத நகரங்களின் பட்டியல்: முதலிடத்தில் வந்த ஆசிய நகரம்
உலகில் குடியிருக்க முடியாத முதல் ஐந்து நகரங்களின் பட்டியலில் பாகிஸ்தானின் கராச்சி நகரம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியிருக்க தகுதியற்ற நகரங்கள்
உலகில் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலைத் தொகுத்துள்ள பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு, மொத்தமுள்ள 173 நகரங்களில் 169வது இடத்தை கராச்சிக்கு அளித்துள்ளது.
அதாவது குடியிருக்க தகுதியற்ற நகரங்களின் பட்டியலில் கராச்சியும் இடம்பெற்றுள்ளதாகவே கூறுகின்றனர். கராச்சி நகருக்கு அடுத்தபடியாக குடியிருக்க தகுதியற்ற நகரங்களாக லாகோஸ், அல்ஜியர்ஸ், திரிபோலி மற்றும் டமாஸ்கஸ் ஆகியவை தெரிவாகியுள்ளது.
Photo by Ali Raza Khatri
எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்பது எகனாமிஸ்ட் குழுவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவாகும். இது ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு மூலம் முன்கணிப்பு மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கி வருகிறது.
உலகெங்கிலும் உள்ள நகரங்களில் கொரோனா பெருந்தொற்று நோய்க்கு பிந்தைய மீட்சியின் மீது இந்த அமைப்பு கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன் நிலைத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் அடிப்படையில் குடியிருக்க தகுந்த நகரங்களை மதிப்பிடுகிறது.
கராச்சி நகரமானது கடந்த 2019ல் 136வது இடத்தில் தெரிவாகி, அப்போதே குடியிருக்க முடியாத நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |