இஸ்ரேஸ் ராணுவ தளத்தை சிதைத்த ஏவுகணைகள்: பதிலடி கொடுத்த ஹிஸ்புல்லா
இஸ்ரேல் ராணுவ தளம் மீது லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹமாஸ் துணைத் தலைவர்
கொலை இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான தீவிரமான போர் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதில் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் ஷேக்சலே-அல்-அரூரி கொல்லப்பட்டார்.
AP
இதையடுத்து இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா இயக்கம் கண்டனம் தெரிவித்ததுடன், சரியான பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்தது.
பதிலடி தாக்குதல்
இந்நிலையில் இஸ்ரேலின் மெரோன் விமான கட்டுப்பாட்டு தளம் மீது 62 வகை ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா இயக்கம் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது.
இது குறித்து ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்த தகவலில், ஹமாஸ் தலைவர் ஷேக்சலே-அல்-அரூரி கொல்லப்பட்டதற்கான முதற்கட்ட பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
EPA
ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய இந்த தாக்குதலில், விமான தளத்தின் ஓடு பாதை பலத்த சேதமடைந்து இருப்பதால் இஸ்ரேலிய ராணுவத்தால் போர் விமானங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லெபனானின் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் ஏவுகணைகளை ஏவு பதிலடி தாக்குதல் கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |