நடுகடலில் அகதிகள் படகை விரட்டி விரட்டி சுட்டு கொடூர தாக்குதல்.. கப்பலில் வந்தவர்கள் வெறிச்செயல்! பதற வைக்கும் காட்சி
மத்திய தரைக்கடல் அகதிகள் பயணித்த படகை லிபிய கடற்படை விரட்டி விரட்டி சுட்டு மோதி கவிழ்க்க முயன்ற காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் சர்வதேச கடலில் மால்டா தேடுதல் மற்றும் மீட்பு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடந்துள்ளது.
ஐரோப்பா நோக்கி பயணிக்கும் அகதிகள் படகை தடுக்க லிபிய கடற்படை இத்தாக்குதல் நடத்தியதாக ஜேர்மன் தன்னார்வ தொண்டு நிறுவனமான Sea-watch தெரிவித்துள்ளது.
கப்பலில் அகதிகள் படகை விரட்டிய லிபிய கடற்படை, இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மேலும், அகதிகளை நோக்கி கட்டைகளை வீசியும், பல முறை படகை மோதி முயன்றுள்ளனர்.
குறித்த அகதிகள் படகில் சுமார் 45 பேர் இருந்ததாக Sea-watch குறிப்பிட்டுள்ளது.
Yesterday #Seabird witnessed a brutal attack by the so-called Libyan Coast Guard deep in the Maltese SAR zone. Our video shows: Shots have been fired in the direction of the boat, the so-called Libyan Coast Guard tried to ram the boat several times and threw objects at people. pic.twitter.com/0C2YSmcPoO
— Sea-Watch International (@seawatch_intl) July 1, 2021
எப்படியே லிபிய கடற்படை தாக்குதலிருந்து தப்பிய அகதிகள் படகு, இத்தாலியின் Lampedusa சென்றடைந்ததாக Sea-watch தெரிவித்துள்ளது.