விமான இருக்கையில் கிடந்த ஆபத்தான பொருள்! பயணிகள் வெளியேற்றம்; தென் கொரியாவில் பகீர் சம்பவம்
தென் கொரியாவில் புறப்பட தாயாக இருந்த விமானத்திற்குள் தோட்டா கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பட்டு ஏற்பட்டது.
விமானத்தில் உயிருள்ள தோட்டா
தென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) புறப்படவிருந்த கொரிய ஏர் விமானத்தில் ஒரு உயிருள்ள தோட்டா கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஏற்ப்பட்ட பரபரப்பால், விமானத்தை தரையிறக்கி அதிலிருந்து 200-க்கும் மேற்பட்ட பயணிகளை வெளியேற்றியதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்குச் செல்லவிருந்த இந்த விமானத்தில், பயணி ஒருவர் தனது இருக்கைக்கு அடியில் புல்லட் கிடப்பதைக் கண்டதாக காலை 8.05 மணிக்கு விமான நிலைய காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
Korean Air
விமானம் காலை 7.45 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டது, ஆனால் 9 மில்லிமீட்டர் தோட்டா கண்டுபிடிக்கப்பட்டவுடன் மீண்டும் முனையத்திற்கு திரும்பியது.
பயணிகள் வெளியேற்றம்
இதையடுத்து, உடனடியாக விமானத்திலிருந்த 230 பேர் (218 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள்) வெளியேற்றப்பட்டனர்.
விமானத்தின் உள்பகுதியில் தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் ராணுவ வெடிகுண்டுகளை அகற்றும் குழுவினர் சோதனை நடத்தி வருவதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் உயிருள்ள தோட்டா எப்படி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரிக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
Korean Air
தென் கொரியாவில் கடுமையான துப்பாக்கி சட்டங்கள் உள்ளன, சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்தால் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 100 மில்லியன் வோன் ($75,300) வரை அபராதம் விதிக்கப்படும்.
உரிமம் பெற்ற விளையாட்டு மற்றும் வேட்டையாடும் துப்பாக்கிகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க்கப்டும், ஆனால் அவற்றையும் காவல் நிலையங்களில் தான் சேமிக்கப்பட வேண்டும்.