மாபெரும் வெற்றி பெறுவோம்! உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கர்ஜித்த வீடியோ
தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை கொடுப்போம் என நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 ஊராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3843 நகராட்சி கவுன்சிலர், 7621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு வருகிற 19ம் திகதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. இதையடுத்து அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்கின்றனர்.
மாபெரும் வெற்றியை நிகழ்த்தி காட்டுவோம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உறுதி -வடசென்னை பெரம்பூர் தொகுதி#TNElection2022 #வெல்வான்_விவசாயி #LocalBodyElection #நாம்தமிழர்கட்சி pic.twitter.com/Xz5OaRgZcu
— ????????????? (@ntkwillpower) February 5, 2022
அந்த வகையில் சென்னை பெரம்பூர் தொகுதி 46வது வட்டத்தின் வேட்பாளர் ஜெயந்தி கூறுகையில், பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் கட்டாயம் வென்றெடுப்போம் என கூறினார்.
37வது வட்டத்தில் நிற்கும் வேட்பாளர் கூறுகையில், மாபெரும் வெற்றியை கட்டாயம் பெற்று தருவேன். ஊழலற்ற ஆட்சியை இம்மண்ணில் விதைப்போம் என கூறினார்.
பெரம்பூர் தொகுதி 34வது வட்டத்தின் வேட்பாளர் நிர்மலா கூறுகையில், அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம், இம்மண்ணில் தமிழ் ஆட்சியை நிறுவுவோம் என கூறியுள்ளார்.