லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய தீ: வெளியேற்றப்பட்ட 100 குடியிருப்புவாசிகள்
திங்கட்கிழமை அதிகாலை கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கிட்டத்தட்ட 100 வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
கிழக்கு லண்டனின் Dagenham பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் திங்கட்கிழமை அதிகாலை 2.44 மணிக்கு தீ பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தின் காரணமாக காலை 7.30 மணியளவில் கட்டிடத்தில் இருந்து அதிக அளவிலான கரும்புகை வெளியேறிய தொடங்கியது, இதனால் அக்கம் பக்கத்தினர் தங்கள் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க அறிவுறுத்தப்பட்டனர்.
அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் கிட்டத்தட்ட 100 குடியிருப்புவாசிகள் கட்டிடத்தில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், 4 பேர் வரை காயமடைந்துள்ளனர், அதில் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணி
கட்டிடத்தில் பற்றிய தீயை அணைக்க 40 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 225 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகளில் முற்றிலுமாக தீக்கிரையான நிலையில், இதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட கட்டிடத்தில் ஏற்கனவே தீ விபத்துக்கான பல சிக்கல்கள் இருந்ததாக லண்டன் தீயணைப்பு படை அதிகாரி Roe தெரிவித்துள்ளார்.
தற்போதைய சமீபத்திய தகவலின் படி, மீட்பு பணி முற்றிலுமாக நிறைவடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |