உக்ரைன் விவகாரம்... லண்டன் மாநாடு வெறும் நாடகம்: ரஷ்யா கடும் சீற்றம்
லண்டனில் உக்ரைன் தொடர்பில் ஐரோப்பிய தலைவர்களின் வாக்குறுதி போருக்கு அமைதியான தீர்வைக் கொண்டுவர உதவாது என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை காட்டமாக பதிலளித்துள்ளது.
போரை இன்னும் நீட்டிகும்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிற மேற்கத்திய தலைவர்களை ஞாயிறன்று சந்தித்தார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு அசாதாரண சந்திப்பில் ஜெலென்ஸ்கி மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான கருத்து மோதலில் ஈடுபட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு லண்டனில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதில், உக்ரைனுக்கான அமைதித் திட்டத்தை இறுதி செய்ய ஐரோப்பியத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் Dmitry Peskov தெரிவிக்கையில்,
உக்ரைனுக்கு ஐரோப்பியத் தலைவர்களின் மேலதிக நிதியுதவியும் பிரித்தானியாவின் 5,000 ஏவுகணையும் போரை இன்னும் நீட்டிகும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.
இது அமைதிக்கான திட்டம் அல்ல என்பது உறுதியாகிறது. போரை முன்னெடுத்துச் செல்வதற்கான வாக்குறுதியாகவே பார்க்க வேண்டும் என்றார். சமாதானத்திற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சிகளும் தற்போதைய தேவையாக உள்ளது.
போராட வேண்டியிருக்கும்
தனது நிலைப்பாட்டை மாற்ற யாராவது ஜெலென்ஸ்கியை கட்டாயப்படுத்துவது மிகவும் முக்கியம். உக்ரைனில் அமைதி திரும்புவதை ஜெலென்ஸ்கி விரும்பவில்லை, அவரை எவரேனும் அதற்கு கட்டாயப்படுத்த வேண்டும் என Dmitry Peskov தெரிவித்துள்ளார்.
லண்டன் சந்திப்பின் போது பிரித்தானியப் பிரதமர் ஸ்டார்மர் தெரிவிக்கையில், பிரித்தானியா, உக்ரைன், பிரான்ஸ் மற்றும் வேறு சில ஒத்த கருத்துள்ள நாடுகளின் கூட்டணியை உருவாக்கி, ட்ரம்பிடம் எடுத்துச் செல்ல ஒரு அமைதித் திட்டத்தை வகுக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கியின் கருத்து மோதல் ஏற்படுத்தியுள்ள கடுமையான பின்னடைவை சீர்செய்ய, ஐரோப்பியத் தலைவர்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்றே Dmitry Peskov தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தம்மால் ட்ரம்புடன் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முடியும் என்றும், அது இரு தலைவர்களுக்கும் மட்டுமான ஒரு சந்திப்பாக இருக்க வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |