லொட்டரி எப்படி வாங்கினால் பரிசு கிடைக்கும்? வெற்றி பெறுவது எப்படி? சில தந்திர தகவல்கள்
தற்போது இருக்கும் உலகில் எந்தளவிற்கு உழைத்தாலும், சிறிய அளவிலாவது அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். அப்படி ஒரு அதிர்ஷ்டத்தின் மூலம் பலரின் வாழ்க்கை மாறியுள்ளதை நாம் பார்த்துள்ளோம்.
அதிலும் குறிப்பாக லொட்டரி குலுக்கல் என்பது பலரின் கனவுகளை ஊக்குவிக்கும் ஒரு அதிர்ஷ்டக்கார போட்டியாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன்கணக்கான மக்கள் நாமும் லொட்டரியில் பரிசை வெல்வோம் என்ற நம்பிக்கை லொட்டரிகளை ஆன்லைன் போன்ற பல முறைகளில் வாங்குகின்றனர்.
ஆனால், அதில் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த அதிர்ஷ்ட காற்று அடிக்கும். அப்படி இருக்கையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று, லொட்டரி மூலம் நாம் பரிசை எப்படி வெல்லலாம் என்ற சில ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
ஆனால், அதில் நாம் இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் பெரிய தொகையை பெற முடியும் என்பது உறுதியாக சொல்ல முடியாது, ஆனால் அதே சமயம் பரிசு சிறிய அளவிலாவது கிடைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
நாம் பெரிய பரிசு கிடைக்கவில்லை என்று தோன்றினால், சில சமயங்களில் சிறிய பரிசுகள் மீது கவனம் செலுத்தும் போது, அது நமக்கு மிகப் பெரிய பலனை கொடுக்கும்.
இது மற்றவர்களைவிட நமக்கு எளிதாக மாறிவிடுகிறது. அது தான் எப்படி என்பதை இங்கு பார்க்க போகிறோம்.
ஜாக்பாட் வெல்ல எளிதான லொட்டரி டிக்கெட்டுகள் எது?
உண்மையில் நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலு, லொட்டரியில் எளிதான பரிசை வெல்ல வேண்டும் என்றால், அதற்கு Polish Mini Lotto நம்பிக்கையானது. இதில் அதிகபட்ச தொகையாக 72,000 பவுண்ட் ஆக உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக Swedish Lotto உள்ளது ஏனெனில், நீங்கள் சிறந்த ஒரு ஆல் ரவுண்டரான லொட்டரியை தேடுகிறீர்கள் என்றால் அதற்கு, Swedish Lotto சரியாக இருக்கும். இதன் இரண்டாவது ஜாக்பாட் பரிசு சில முரண்பாடுகளை கொண்டுள்ளது.
இதை நீங்கள் முயற்சி செய்யும் போது, ஜாக்பாட் வெல்வதற்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளது. இதில், ஒரு விளையாட்டின் அடிப்படை விலை வெறும் 50p-வில் உள்ளது.
மேலும் 2 பவுண்ட் மூலம் லொட்டரி பரிசுகளை வெல்வதற்கு 16 வெவ்வேறு வழிகள் உள்ளன.
அதில் உள்ள முதல் 5 இடங்கள்
Polish Mini Lotto: அதிகபட்ச பரிசு 72,000 பவுண்ட், இதில் ஒவ்வொரு நாளும் 1: 850,668 பேர் என்ற விகிதத்தில் விளையாடப்பட்டது.
Swedish Lotto: அதிகபட்ச பரிசு 18 மில்லியன் பவுண்ட், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் 1: 6,724,520 பேர் என்ற விகிதத்தில் விளையாடப்பட்டது.
Austrian Lotto: அதிகபட்ச பரிசு 6.8 மில்லியன் பவுண்ட், புதன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 1:8,145,060 பேர் என்ற விகிதத்தில் விளையாடப்பட்டது.
OZ Lotto: அதிகபட்ச பரிசு 545,000 பவுண்ட், திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் 1:8,145,060 பேர் என்ற விகிதத்தில் விளையாடப்பட்டது.
Irish Lotto: அதிகபட்ச பரிசு தொகையாக 13 மில்லியன் பவுண்ட் உள்ளது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் 1: 10,737,573 என்ற விகிதத்தில் விளையாடப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஒரு சிறிய பரிசை வெல்ல வேண்டும் என்றால், அதற்கு பிரான்ஸ் லொட்டரி உள்ளது. இதில் ஆறில் ஒருவருக்கு வாய்ப்பு என்ற விகிதத்தில் குலுக்கப்படுகிறது.
இதற்கு அடுத்தப்படியாக UK Lotto-வில் ஒன்பது பேருக்கு ஒன்று, அதே சமயம் Spain's El Gordo De La Primitiva-வில் 10-ல் ஒருவருக்கும், அதேசமயம், Austria Lotto,12-ல் ஒருவருக்கு என்ற அதிர்ஷ்டத்தை கொடுக்கிறது.
பொதுவாக லொட்டரி குலுக்கலின் போது, ஐந்து, ஏழு மற்றும் 10 போன்ற எண்கள் தான் மிகவும் பிரபலமான பலரால் தேர்ந்தெடுக்கப்படும் எண்களாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.