கருத்துக்கணிப்புகளை முறியடித்து பிரேசிலின் புதிய ஜனாதிபதியான லூயிஸ் இனாசியோ!
தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை பொய் என நிரூபித்து சிறையில் இருந்து விடுதலையானவர்
லூயிஸ் இனாசியோ இனாசியோ 2003-2010 காலகட்டத்தில் ஜனாதிபதியாக இருந்தபோது, அவர் கொண்டுவந்த சீர்திருத்தங்களால் பிரேசில் பொருளாதாரம் வலுவானது
பிரேசில் நாட்டின் புதிய ஜனாதிபதியாக லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா தெரிவாகியுள்ளார்.
பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் 9 பேர் போட்டியிட்டனர். எனினும் தற்போதைய ஜனாதிபதி போல்சனரோவுக்கும், முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோவுக்கும் கடுமையான போட்டி நிலவியது.
ஆனால் இடதுசாரி கொள்கை கொண்ட இனாசியோவுக்கு எதிராகவே கருத்துக்கணிப்புகள் இருந்தன. இந்த நிலையில் நேற்று முதல் ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன.
Reuters/Carla Carniel
முதல் சுற்றில் போல்சனரோ முன்னிலை வகித்து வந்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் இனாசியோ முன்னிலை வகித்தார். இறுதியில் 50.9 சதவீத வாக்குகளை பெற்றதன் மூலம் லூயிஸ் இனாசியோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Getty Images/File
அதனைத் தொடர்ந்து கருத்துக்கணிப்புகளை முறியடித்து பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக அவர் அமர உள்ளார்.