1,600 கோடியில் ஆடம்பர பங்களா! படுக்கையறை மட்டும் 4,000 சதுர அடி - வாங்க போட்டியிடும் இந்தியர்
துபாயில் 1,600 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள ஆடம்பர பங்களாவை வாங்கும் முனைப்பில் இந்தியர் ஒருவர் உள்ளார்.
மார்பிள் பேலஸ்
எமிரேட்ஸ் ஹில்ஸ் சுற்றுப்புறத்தில் ஆயிரக்கணக்கான கோடி செலவில் ஆடம்பர பங்களா கட்டப்பட்டுள்ளது. ''மார்பிள் பேலஸ்'' என்று அழைக்கப்படும் இந்த பங்களாவில் 5 படுக்கையறைகள் உள்ளன.
அதில் ஒரு படுக்கையறை 4,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. மொத்தம் 60,000 சதுர அடி கொண்ட இந்த பங்களாவின் விலை 1,600 கோடி (204 மில்லியன் அல்லது 750 மில்லியன் திர்ஹாம்கள்) ஆகும்.
12 ஆண்டுகால கட்டுமானப் பணிகள் நடைபெற்று இந்த ஆடம்பர பங்களா 2018ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.
1000 சதுர அடியில் விருந்தினர் அறை
இந்த ஆடம்பர பங்களாவில் சுமார் 1,000 சதுர அடியில் விருந்தினர் அறையும், இரண்டாவது பெரிய படுக்கையறை 2,500 சதுர அடியிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் Underground Bar ஆக விருந்தினர் அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பங்களாவின் தரைத்தளத்தில் பொழுதுபோக்கு மற்றும் உணவு அருந்துவதற்கான இடங்களும் உள்ளன.
மேலும் 15 கார் கேரேஜ், 19 ஓய்வறைகள் மற்றும் உட்புற, வெளிப்புற குளங்கள், இரண்டு கூரைகள், 80 ஆயிரம் லிற்றர் பவளப்பாறை மீன்வளம் மற்றும் மின் துணை நிலையம், அவசர அறைகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த பங்களா கொண்டுள்ளது.
விற்பனை அறிவிப்பு
இந்த ஆடம்பர பங்களா விற்பனைக்கு என அறிவிக்கப்பட்ட மூன்று வாரங்களில் இருவர் மட்டுமே பார்வையிட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ரஷ்யர் என்பதும், மற்றொருவர் இந்தியர் என்பதும் ஆச்சரியம் தரும் விடயமாக உள்ளது.
குறித்த இந்தியர் ஏற்கனவே எமிரேட்ஸ் ஹில்ஸில் மூன்று குடியிருப்புகளை வைத்துள்ளார். ஆனால், மார்பிள் பேலஸை வாங்குவது குறித்து தன் மனைவி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அவர் கூறுகையில், அவரது மனைவியோ பங்களா இன்னும் சற்று Modern ஆக இருக்க வேண்டும் என விரும்புகிறாராம்.
Sotheby’s International Realty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |