நம் மொராக்கோ நண்பர்களுக்கு..பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் கூறிய விடயம்
கத்தார் உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வியடைந்த மொராக்கோ வீரர்கள் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி ட்வீட் செய்துள்ளார்.
முதல் ஆப்பிரிக்க நாடு
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதியில் மொராக்கோவை 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
அரையிறுதி வரை சென்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்த மொராக்கோ, இந்த தோல்வியினால் கலக்கமடைந்தது. அந்த அணியின் வீரர்கள் தோல்வியை தாங்க முடியாமல் மைதானத்தில் கதறி அழுதனர்.
மொராக்கோவுக்கு வாழ்த்து
எனினும், அவர்களின் முயற்சியை ரசிகர்களை வெகுவாக பாராட்டினர். அந்த வகையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரானும் மொராக்கோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
À nos amis marocains : félicitations pour ce beau parcours. Vous marquez l’histoire du football. pic.twitter.com/lupE7pgq0z
— Emmanuel Macron (@EmmanuelMacron) December 14, 2022
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்த அழகிய பயணம் செய்த நம் மொராக்கோ நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் கால்பந்தின் வரலாற்றை குறித்துள்ளீர்கள்' என தெரிவித்துள்ளார்.
@Sorin Furcoi/Al Jazeera