ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை இன்னும் கைக்கு வரவில்லையா? இதுதான் நீங்கள் செய்ய வேண்டியது
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் கிடைக்காதவர்கள் மீண்டும் பெற்றுக் கொள்ள அமைச்சு புதிய முறையை அறிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் கடந்த 15ஆம் திகதி காஞ்சிப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் மகளிருக்கு 1000 ரூபாய் உதவித் தொகையாக கிடைக்கும்.
மேலும், இந்த திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 5ஆயிரம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
5 லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது, இதற்கான காரணம் குறித்து இன்று மனுதாரரின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் நிராகரிக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் மேல் முறையீடு விண்ணப்பம் தாக்கல் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
இந்த சேவைக்கு ஈ-சேவை மையம் வழியாகவும் மேல்முறையீடு செய்யலாம் மேலும், இந்த சேவைக்கு வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |