2030-ஆம் ஆண்டுக்குள் 16 புதிய SUV மொடல்களை அறிமுகம் செய்யவுள்ள Mahindra நிறுவனம்
Mahindra & Mahindra நிறுவனம் அடுத்த ஆறு ஆண்டுகளில் 16 புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் என்று அறிவித்துள்ளது.
16 வாகனங்களில், 9 புதிய ICE SUV-களாகவும், மற்ற 7 புதிய EV SUV-களாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மின்சார SUVகள் மற்றும் புதிய EVகள் FY2025ன் நான்காவது காலாண்டில் வரும். அதாவது 2025 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் நிதியாண்டுக்கான நிதி முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் மஹிந்திரா இதனை அறிவித்தது.
2030-க்குள் மூன்று Facelift மற்றும் ஆறு புதிய மொடல்கள் உட்பட 9 புதிய SUV-களையும், 7 புதிய எலக்ட்ரிக் SUV-களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்பது ICE இன்ஜின் மொடல்களில், மேம்படுத்தப்பட்ட பதிப்பு கிடைக்கும்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா SUV 3XO-விற்கான ஆர்டர் booking திறந்த ஒரு மணி நேரத்திற்குள் 50,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மூன்று நிதியாண்டுகளில் தனது வாகன வணிகத்தில் கணிசமான அளவு ரூ.27,000 கோடி முதலீடு செய்யப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் அதன் EV உற்பத்தி திறனை மாதத்திற்கு 10,000 யூனிட்களாக விரிவுபடுத்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mahindra and Mahindra SUVs, Upcoming Mahindra SUVs, Upcoming Mahindra Cars, Mahindra to launch 16 new SUVs in India by 2030