நாட்டு மக்களை வீதியில் இறங்கி போராடத் தூண்டிய இரு பெண் பத்திரிகையாளர்கள்: சிறையில் இருந்து விடுவிப்பு
ஈரானில் பொலிஸ் காவலில் கொல்லப்பட்ட பெண் தொடர்பில் செய்திகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து, நாடு தழுவிய போராட்டத்திற்கு தூண்டிய பெண் பத்திரிகையாளர்கள் இருவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் மேல்முறையீடு
ஓராண்டுக்கும் மேலாக இந்த இரு பெண் பத்திரிகையாளர்களும் சிறையில் இருந்துள்ளனர். 31 வயதான Niloufar Hamedi மற்றும் 36 வயதான Elaheh Mohammadi ஆகிய இருவருமே பொலிஸ் காவலில் மரணமடைந்த Mahsa Amini தொடர்பில் செய்திகளை வெளிக்கொண்டுவந்தவர்கள்.
@afp
தற்போது இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் சிறைத்தண்டனைக்கு எதிராக பத்திரிகையாளர்கள் இருவரும் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முடிவெடுக்கும் வரையில் அவர்கள் சிறைக்கு வெளியே இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
முறையாக முக்காடு அணிந்துகொள்ளவில்லை என குறிப்பிட்டு குர்து இனத்தவரான மஹ்ஸா அமினி சிறப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், பொலிஸ் காவலில் அவர் மரணமடைந்தார்.
ஆனால் ஏற்கனவே சுகவீனமாக இருந்த காரணத்தால் மஹ்ஸா அமினி மரணமடைந்ததாக உடற் கூறாய்வுக்கு பின்னர் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் ஐ.நா மனித உரிமைகள் நிபுணர்கள் தெரிவிக்கையில், பொலிஸ் காவலில் அவர் துன்புறுத்தப்பட்டு, மரணமடைந்ததாக குறிப்பிட்டனர்.

பிரித்தானியாவும் அமெரிக்காவும் ஒன்று... உலகப் போரின் விளிம்பில்: கிரேக்கத்தின் நாஸ்ட்ராடாமஸ் எச்சரிக்கை
மஹ்ஸா அமினியின் மரணத்தை முதன்முதலில் ஈரான் மக்களுக்கும் உகலிற்கும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர் Niloufar Hamedi. அத்துடன் மஹ்ஸா அமினியின் தந்தை மற்றும் பாட்டியாரின் புகைப்படங்களையும் வெளியிட்டு, துக்கத்திற்கான கருப்பு உடை நமது தேசியக் கொடியாக மாறப்போகிறது என குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்
இதனிடையே, மஹ்ஸா அமினியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை செய்தியாக வெளியிட்ட Elaheh Mohammadi, பெண், வாழ்க்கை, சுதந்திரம் என நூற்றுக்கணக்கானோர் கதறியதை பதிவு செய்தார்.
@afp
இந்த நிலையில் மஹ்ஸா அமினியின் இறுதிச்சடங்கு முடிந்த சில மணி நேரத்தில் நீதி கேட்டு முதல் ஆர்ப்பாட்டம் துவங்கியது. படிப்படியாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
இந்த சம்பவங்களுக்கு மொத்த காரணம் என குறிப்பிட்டு, Niloufar Hamedi மற்றும் Elaheh Mohammadi ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.
நீதிமன்ற விசாரணை முடிவில் இருவருக்கும் 13 மற்றும் 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. தற்போது இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |